IIHS நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் இயன் மருத்துவராகும் வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

IIHS நிறுவனத்துடன் இணைந்து ஐரோப்பாவில் இயன் மருத்துவராகும் வாய்ப்பு

IIHS நிறுவனம் பின்லாந்து நாட்டின் Helsinki Metropolia University of Applied Sciences பல்கலைக்கழகத்தின் இயன் மருத்துவ (Physiotherapy) பட்டமொன்றை பெறும் வாய்ப்பினை இளம் இயன் மருத்துவ மாணவர்களுக்கு வழங்குகிறது.

IIHS (www.iihsciences.edu.lk) நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற இயன் மருத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியை இலங்கையில் நிறைவு செய்த பின்னர் நேரடியாக மேற்படி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஒரு துறை என்பதால் தகுதி வாய்ந்த இயன் மருத்துவர் ஒருவருக்கு பல்வேறு சமூகங்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் பணியாற்றும் வாய்ப்பினை பெற முடியும்.

அதிக அனுகூலங்களுடன் கூடிய உயர் சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவுகள் பலவற்றை பெற்று எதிர்கால சந்ததியினருக்காக திருப்திகரமான சேவையினை வழங்குவதற்கு இயன் மருத்துவம் துணை நிற்கும்.

இயன் மருத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியை இலங்கையில் பூர்த்தி செய்வதானது, பின்லாந்து நாட்டில் இயன் மருத்துவ பட்டப்படிப்பினை கற்பதற்கு தகுதியாக அமைவதோடு, அது மாதாந்தம் 05 முதல் 06 இலட்ச ரூபாய் வருமானத்தை ஈட்டித் தரும் முதலீடாகாவும் அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

IIHS நிறுவனத்தில் இயன் மருத்துவ உயர் டிப்ளோமா பாடநெறியை அண்மையில் நிறைவு செய்த திருமதி சமித்தா ஜயலத் இன்றளவில் பின்லாந்து நாட்டின் Helsinki Metropolia University of Applied Sciences பல்கலைக்கழகத்தில் இயன் மருத்துவ பட்டப்படிப்பினை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IIHS நிறுவனம் இப்பொழுது இலங்கை மாணவ மாணவியர்களுக்கு பின்லாந்தில் கல்வி கற்பதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் மூலம் சமூக, பாரம்பரிய மற்றும் கலாசார ரீதியாக வளர்ச்சி கண்ட பெருநில பகுதியொன்றில் கல்வி கற்பதன் மூலம் வாழ்க்கைக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

இயன் மருத்துவராக பின்லாந்தில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் ஐரோப்பா முழுவதிலும் சேவையாற்றும் அரிய வாய்ப்பையும் பெறலாம் என IISH நிறுவனத்தின் ஸ்தாபகரும் அதன் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தருமான கலாநிதி கித்சிறி எதிரிசிங்க தெரிவித்தார். 

Comments