செய்தியாகும் ஊர்வம்புகள்! | தினகரன் வாரமஞ்சரி

செய்தியாகும் ஊர்வம்புகள்!

"எவன் பெண்டாட்டி எவனுடன் போனாலும், லெப்பைக்கு நாலு பணம்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இப்போதெல்லாம் யார் யாருடன் போகிறார்? அவள் திரும்பவும் பிள்ளை கிடைக்க இருக்கிறாளாம்! அவனுக்கு இரண்டு பெண்டாட்டியாம்! அவள் அவனை விட்டுவிட்டாளாம்! அவன் திரும்பவும் கலியாணம் கட்டிட்டானாம்! என்று மற்றவரைப்பற்றித் தேடுவதிலேயே அநேகருடைய காலமும் கழிந்து வருகிறது. இதை ஊர் வம்பு என்பார்கள் அல்லது விடுப்பு என்று சொல்லுவோம். இந்த விடுப்புகள்தான் இப்போது ஊடகங்களில் செய்தியாகவும் வந்துகொண்டிருக்கின்றன.

உள்ளூர் ஊடகங்கள்தான் அப்படியென்றால், சர்வதேசத்திலும் அப்படித்தான் இருக்கின்றது. டயானாவைப் பெப்பராசிகள் துரத்திச் சென்றதைப்போன்று தற்போது கேட் மிடில்ற்றனுக்குப் பெண் குழந்தையாம். திரும்பவும் முழுகாமல் இருக்கிறாளாம். ஐஸ்வர்யா ராய்க்கு ஆண் குழந்தையாம்! என்றுதான் எழுதுகிறார்கள்.

பேர்த்தி முன்னாலேயே பாட்டி மானபங்கம், நான்கு ஆண்களை ஏமாற்றிய பெண், பஸ்ஸில் காதல்கொண்டு கர்ப்பை இழந்த இளம்பெண்! என்று ஊர் வம்புகளுக்ெகன்றே இப்போது பத்திரிகைள் வரத்தொடங்கிவிட்டன. சில வேளைகளில் வீடுகளுக்குக் கொண்டு செல்லாமல், கொண்டு செல்ல முடியாமல், முச்சக்கர வண்டியிலேயே பத்திரிகையை வைத்துவிட்டுச் செல்லும் நிலைக்குச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

என்றாலும், பத்திரிகைகளை எழுதி ​வெளியிடும் ஊடகவியலாளர்களை விடவும் பொது மக்கள் தௌிவாக இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

அண்மையில் ஒரு செய்தி வந்திருந்தது, வங்கியில் அடகு வைத்த நகை மோசடி, பிரபல பாடகரின் மனைவி கைது! என்று. இந்தச் செய்தியை ஒருவர் முகநூலில் பதிவிட்டிருந்தார். பலர் விருப்பு தெரிவித்திருந்தார்கள். ஒருவர் மட்டும், "இது செய்தியல்ல, இஃது ஊர் வம்பு" என்று எழுதியிருந்தார்.

அதற்கு அவர், ஊர்வம்புகளைத்தானே செய்தியாகப் படிக்கிறீர்கள்?! என்று கருத்தைப் பதிந்திருந்தார். இந்தப் பக்குவம் எல்லோருக்கும் இருக்கின்றதா? அன்றாடம் ஊர் வம்புகளைப் பற்றித்தானே கதை! குற்றத்தைப் பாருங்கள். ஏன் குற்றம் செய்தவர்களைப் பற்றித் தேடுகிறீர்கள். அந்தப் பிரபல பாடகரின் மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவர் அண்மையில்தான் அவரைத் திருமணம் செய்திருந்தார். அதனையும் பிரபல்யபடுத்தியது ஊடகங்கள்தான். முதல் மனைவி உயிரிழந்ததும் அவர் மறுமணம் செய்திருக்கிறார். இதனால், யாருக்கு நட்டம்! இதில் பொது மக்களுக்கு உள்ள அக்கறைதான் என்ன?!

பொதுமக்களின் ஆர்வத்தைத் தூண்டும் சம்பவங்கள்தானே செய்திகள்! முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதுண்டு விழுவதால், பொது மக்களுக்கு என்ன பாதகம்? அல்லது இரண்டு சைக்கிள்கள் மோதி விபத்து நேர்ந்தால், யாருக்கு என்ன கெடுதல். அந்த விபத்து ஒரு செய்தியைச் சொல்லுமாக இருந்தால், மக்களுக்குக் கொண்டு செல்லலாம். நடிக்ைகக்குப் பிள்ளை பிறந்தால் என்ன பிறக்காவிட்டால் என்ன? அதனால், நம் குடும்பத்திற்கு வாரிசு இல்லாமல் போய் விடுமா? அண்மையில், ஓர் ஆங்கில (தமிழ்) நடிகை யாரையோ கட்டிப்பிடித்துக்ெகாண்டு இருக்கும் காட்சியை வெளியிட்டதால், ரசிகர்களுக்கு வருத்தமாம்! சோகத்தில் தள்ளிவிட்டாளாம்!

ஒரு நடிகையை எத்தனைபேர்தான் கலியாணம் கட்ட முடியும்? ஓவியாவைச் சிம்பு கட்டினால் என்ன, சிறிகாந்த் கட்டினால் உனக்ெகன்ன? விட்டுப்போட்டு வேலையைப் பாருங்களடா! என்கிறார் நண்பர். பிரபலங்கள் என்றாலும் பிரமுகர்கள் என்றாலும் அவரைப் பற்றி அறிய விரும்புவார்கள்தானே மக்கள்! என்று சொன்னால், அறிந்துகொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்? அதற்குத்தான் தனித்தனிப்பக்கங்கள் இருக்கின்றனவே! அதில் போட்டுக்ெகாள்ளுங்களன். ஒரு தேசிய பத்திரிகையில், முக்கியத்துவமற்ற ஊர் வம்புகளைச் செய்தியாகப்போடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். பத்திரிகைகளுக்கும் இப்போது செய்திக்குப் பஞ்சம்! அறையில் சாப்பிட வைத்திருந்த சோற்றில் பூனை வாய் வைத்துவிட்டது என்பதையும் செய்தியாக்குகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் கல்வி இராஜாங்க அமைச்சர் ஒரு பொங்கல் விழாவிற்குச் சென்றிருந்தார். அங்கு அவர் உரையாற்றும்போது, இப்போது மக்கள் பெறுமதியற்ற செய்திகளைத்தான் தேடுகிறார்கள். களவு, கொள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் என்று வரும் செய்திகளுக்குத்தான் பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கின்றன. அதனை நிறுத்திபெறுமதியான செய்திகளைக் கொடுத்தால், பொது மக்களும் மாறுவார்கள். பத்திரிகைகள் வெறுமனே வியாபாரத்தை மாத்திரம் பார்க்காமல், சமூகத்தின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும் என்று கோரிக்ைக விடுத்திருக்கிறார் அவர்.

பராளுமன்றத்தில் உள்ள அநேகர் பத்தாம் வகுப்பும் படிக்கவில்லையாம்! படிக்காவிட்டால் உனக்ெகன்ன? நீர் படித்தவன் மாதிரி நடந்துகொள் என்று பத்திரிகையாளர்களுக்குக் கூறுகிறார் நண்பர். அடுத்தவர்களைக் கழுவி வெள்ளையடிக்கும் பணியை விட்டுவிட்டு ஊடகங்கள் தங்களைக் கழுவி தூய்மைப்படுத்திக்ெகாண்டால், இந்த நாடும் நாட்டு மக்களும் மேன்மையுறுவார்கள். ஊர் வம்புகளைத் தேடிக்ெகாண்டிருக்காமல், மக்களுக்குச் செய்திகளை வழங்க முயற்சியுங்கள் என்கிறார் நண்பர். பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்! 

Comments