ஆடம்பர வாழ்க்கைக்கு கல்கிஸ்சை 'அவெனியு 9' அடுக்குமனை குடியிருப்புகள் | தினகரன் வாரமஞ்சரி

ஆடம்பர வாழ்க்கைக்கு கல்கிஸ்சை 'அவெனியு 9' அடுக்குமனை குடியிருப்புகள்

 

 கேட்வே ஹோம்ஸ் (பிரைவேட்) லிமிடட் நிறுவனம் கல்கிஸ்சையில் 'அவெனியு 9' செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக உயர்தரமான கட்டுமானப் பணிகளை நிறைவு செய்துள்ளது. இலங்கையின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தனது வருங்கால செயற்றிட்டங்களை திட்டமிடும் இந்நிறுவனத்திற்கு இந்த செயற்றிட்டமானது ஒரு முக்கிய படிக்கல்லாகும்.

தனிச்சிறப்புவாய்ந்த கட்டமைப்புடன் வடிவமைக்கப்படவுள்ள இக் குடியிருப்புகளில் அதன் பிரத்யேகத் தன்மை மற்றும் எளிதான பராமரிப்பு என்பவற்றை பெற்றுத்தருவதே இவ்வகையான குடியிருப்புக்களின் நோக்கமாகும்.

மேம்படுத்தப்பட்டுவரும் அடுக்குமனை குடியிருப்புகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதுடன் அமைப்புத் திட்டம், வழங்கப்படும் வசதிகள் மற்றும் உள்ளக அமைப்பு என்பனவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு அடுக்குமனைக் குடியிருப்புகளும் ஒரேவிதமானதாகவே காணப்படுகின்றன. இவ்வாறு அடுக்குமனைக் குடியிருப்புகளும் ஒரேவிதமானதாக காணப்படும் ஒரு பிரதேசத்தில் அவெனியு 9 ஆனது ஒரு தனித்துவமாக முதற்பார்வையிலேயே செளகரியம், வசதி மற்றும் தரம் என்பவற்றை வெளிப்படுத்துகின்றது.

கல்கிஸ்ஸை பிரதேசத்தின் கடற்கரையோர பகுதியில் அமைந்துள்ள இந்த அடுக்குமனைக் குடியிருப்பானது முக்கியத்துவமிக்க வகையில் அமைந்துள்ளது. தனிமையான ஆசுவாசமான பிரதேசத்தை எதிர்பாரப்போருக்கு பொருத்தமானதாகவும் காணப்படுகின்றது. இவ்வாறான முக்கிய மைல்கல்களாக, 100 மீற்றர் துாரத்தில் புகழ்பெற்ற மவுன்ட் லவினியா ஹோட்டல், புகழ்பெற்ற பாடசாலைகள், பல்பொருள் அங்காடிகள், வணிக அங்காடிகள் மற்றும் உணவகங்கள் என்பன காணப்படுகின்றன.

அவெனியு 9 தரைத்தளம் மற்றும் ஐந்து தளங்களைக் கொண்ட இக் கட்டிடமானது அழகாக வடிவமைக்கப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட எட்டு அலகு வீடுகளையும் ஒரு பென்ட் ஹவுஸ் ஐயும் உள்ளடக்கிக் காணப்படும். ஒவ்வொரு வீட்டு அலகுகளும் 1350 ச. அடியைக் கொண்டிருப்பதுடன் வரவேற்பறை, சாப்பாட்டறை,பான்ரி, மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள், தனிப்பட்ட வேலையாட்களுக்கான குவாட்டர்ஸ்கள் மற்றும் சுற்றிலும் பால்கனிகள் என்பவற்றை கொண்டுள்ளன.

இவை நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி பொதுவான பிரதேசங்களிற்கு சூரிய சக்தியை வழங்குவதுடன் 24 மணித்தியால பாதுகாப்பு, தீ பாதுகாப்பு அமைப்பு மற்றும் மின்னல் பாதுகாப்பிற்காக கூரைமீதான மின்னல் கடத்தி என்பனவற்றை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. 

Comments