இலங்கையில் முதல் தடவையாக Mychef.lk கிறிஸ்ப்ரோ அறிமுகப்படுத்தியுள்ள Cookathon | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் முதல் தடவையாக Mychef.lk கிறிஸ்ப்ரோ அறிமுகப்படுத்தியுள்ள Cookathon

 இலங்கையில் முதல் தடவையாக, பிரபலமான ஆன்லைன் உணவுத்தளமான Mychef.lk இணையத்தளங்களில் உலாவும் உணவுப்பிரியர்களுக்காகவும், ஆர்வமுள்ள சமையல் கலைஞர்களுக்காவும் Crysbro உடன் இணைந்து, Cookathonஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து Facebook பாவனையாளர்களும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம் என்பதோடு, அவர்கள் தங்கள் சமையல்கலைத் திறன்களை வெளிப்படுத்து வதற்கான ஒரு மேடையாகவும் இது அமைந்துள்ளது.

Cookathon வெற்றியாளர்களுக்கு ரூபா 175,000 வரையில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன. ஆர்வமுள்ள அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். அசல் சமையல் செய்முறை அல்லது பரம்பரை பரம்பரையாக வந்த சமையல் செய்முறைப் பட்டியலை, அது தயார் செய்யப்படும் முறையை காண்பிக்கும் வீடியோ படத்துடனும், இறுதியில் தயார்செய்யப்பட்ட உணவின் முழுமையான புகைப்படத்துடனும் அனுப்பிவைக்க வேண்டும்.

இப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் சமையல் செயன்முறைகளின் தரம், தனித்துவம் மற்றும் அசல்தன்மை என்பன, நடுவர்களைக் கொண்ட குழுவினால் மதிப்பீடு செய்யப்படும்.

போட்டிக்கான அனைத்து விண்ணப்பங்களும் Mychef.lk Facebook பக்கத்தினூடாக, 2018 ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து புகைப்படங்களும் JPG அல்லது PNG முறையில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இப்போட்டி தொடர்பான மேலதிக விபரங்களை Mychef.lk இணையத்தளம் அல்லது சமூக வலைத்தளங்களுக்கு விஜயம் செய்வதன் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.

Mychef.lk என்பது தனித்துவமான மெய்நிகர் தளமாகும். இது இலங்கையிலும் வெளிநாடுகளிலுமுள்ள உணவுப் பிரியர்களையும், சமையல்கலை வல்லுனர்களையும் ஒன்றிணைக்கும் மேடையாகவும் விளங்குகிறது. 

Comments