வாடிக்ைகயாளர்களுக்கு ஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை வழங்கும் செலான் | தினகரன் வாரமஞ்சரி

வாடிக்ைகயாளர்களுக்கு ஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை வழங்கும் செலான்

டிஜிட்டல் மயமாக்கம் வேகமாக நடந்து வரும் நிலையில், நாம் வாழும் முறை, ஆற்றும் பணி மற்றும் பின்பற்றும் வாழ்க்கைப்பாணியில் தொழில்நுட்பம் முக்கிய பங்கை வகிக்கிறது.

தொழில்நுட்பம் மேம்படும் நிலையில், புதிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதற்கு வங்கிகள் துரிதமாக இயங்க வேண்டியுள்ளது, இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். இன்று புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியன நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்துள்ளன. நவீன உலகில் தமது வளர்ச்சியை பேண, வங்கிகளும் இந்த தொழில்நுட்ப மேம்படுத்தல்களை பின்பற்ற வேண்டியுள்ளது.

செலான் வங்கியின் பிரதம தகவல் அதிகாரி ஹர்ஷ வணிகதுங்க கருத்துத்தெரிவிக்கையில்,“செலான் வங்கி வேகமாக வளர்ந்து வரும் வங்கியாகும். எனவே, தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலையில் திகழ்வதுடன்,எமது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறோம். புத்தாக்கமான வங்கியியல் தீர்வுகளை வழங்குவது என்பதில் எமது கவனம் காணப்பட்டது. இதனூடாக பாவனையாளருக்கு உயர் மட்ட அனுபவத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொடுக்க முடியும். இதனை அடிப்படையாகக்கொண்டு, வாடிக்கையாளர் செளகரியம், பாதுகாப்பு, புத்தாக்க தொழில்நுட்பம் மற்றும் செயன்முறை சீராக்கல் ஆகியவற்றில் வங்கி தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதனூடாக எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. எமது டிஜிட்டல் புரட்சியினூடாக, நாம் எமது நிதிசார் தீர்வுகளை டிஜிட்டல் முறையினூடாக பெற்றுக்கொடுப்பது குறித்து கவனம் செலுத்துவது மட்டுமின்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.

வாடிக்கையாளர் செளகரியம் தொடர்பில் ஹர்ஷ தெரிவிக்கையில்,“செலான் வங்கி தொடர்ச்சியாக தமது வாடிக்கையாளர் ஈடுபாட்டு பகுதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதனூடாக அவர்களுக்கு இலகுவான, செளகரியமான மற்றும் பாதுகாப்பான வங்கியியல் அனுபவம் வழங்கப்படுகிறது. எமது தகவல் தொழில்நுட்ப அணியில், உயர் தகைமை வாய்ந்த துறைசார் நிபுணர்கள் காணப்படுவதுடன், இவர்கள் நிதித்துறையுடன் இணைந்துள்ளதுடன், புத்தாக்கமான வாடிக்கையாளர் அனுபவங்களை பெற்றுக்கொடுக்கும் வகையில் துறைசார் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது என்றார். 

Comments