சிறந்த பயிற்சியாளர் மொஹமட் ரூமி | தினகரன் வாரமஞ்சரி

சிறந்த பயிற்சியாளர் மொஹமட் ரூமி

கடந்த வாரம் முடிவுற்ற டயலொக் சம்பியன் லீக் உதைபந்தாட்டக் கிண்ணத் தொடரில் மூன்றாவது முறையாகவும் கொழும்பு உதைபந்தாட்டக் கழகம் சம்பியனாகத் தெரிவானது.

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் தேசிய உதைபந்தாட்ட கழங்களுக்கிடையிலான பிரதான தொடரான டயலொக் சம்பியன் லீக் கிண்ணத்தை தொடர்ந்து மூன்று முறை வென்ற அணியாக கொழும்பு உதைபந்தாட்டக் கழகம் சாதனை படைத்துள்ளது. அவ்வணியின் பயிற்சியாளரான மொஹம்மட் ரூமியின் பயிற்சியன் கீழ் மூன்றாவது முறையாகவும் சம்பியனாகத் தெரிவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் வெற்றி பற்றிக் கொழும்பு உதைபந்தாட்ட கழகத்தின் தலைவர் சபீக் யூசுப் கருத்துத் தெரிவிக்னகயில்- சென்ற முறையும் சம்பியனாகத் தெரிவான போது பயிற்சியாளருக்கு பல வெகுமதிகளை வழங்கினோம். இம்முறையும் பெறுமதியான வெகுமதிகளை வழங்கவுள்ளோம என்றும் இவ்வெற்றியில் இவரின் பங்கு மிக முக்கிமானது. அதேபோல் அணி வீரர்களின் பங்களிப்பையும் இங்கு மறத்தலாகாது என்றும் குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்- இச்சுற்றுப் போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்திருந்தாலும் இறுக்கமான இறுதிப் போட்டியில் முதல் சுற்றுப் போட்டிகளில் தோல்வியுறாத அணியான ரினோன் அணிக்கெதிராக எங்கள் வீரர்கள், திறமையாகவும், நம்பிககையுடன் விளையாடினர். இதற்கு பயிற்சியாளர் ரூமியும் பின்னாலிருந்து சிறந்த பங்களிப்புச் செய்திருந்தார் என்றும் தலைவர் சபீக் யூசுப் தெரிவித்தார்.

10வருட வரலாற்றைக் கொண்ட கொழும்பு உதைபந்தாட்டக் கழகம் 2008ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பின் 2010ம் ஆண்டு சில்வர் கிண்ண சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்டது. அன்று முதல் டிவிஷன் 03 இலிருந்து டிவிஷன் -1 வரையான நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகளில் அநேகமான கிண்ணங்களை வென்று குறுகிய காலத்தில் 2014 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான பிரதான உதைபந்தாட்ட சுற்றுகளில் விளையடும் தகுதியைப் பெற்றுக்கொண்டது. அவ்வருடமே நடைபெற்ற சம்பியன் லீக் சுற்றுல் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட கொழும்பு உதைபந்தாட்டக் கழகம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்தக் குறுகிய கால முன்னேற்றத்தில் அவ்வணியின் பயிற்சியாளர் மொஹம்மட் ரூமியின் பங்கு முக்கியமானது. தொடர்ந்து மூன்று வருடங்கள் டயலொக் சம்பியன் லீக் கிண்ணத்தை வெற்றது மகிழ்சியளிப்பதாகக் கூறினார். “குறுகியகாலத்தில் எங்கள் அணியின் தொடர் வெற்றி குறித்து கொழும்பு வாழ் ரசிகர்கள் மட்டுமின்றி முழு இலங்கை உதைபந்தாட்ட ரசிகர்களும் வாழ்த்துகின்றனர். எமது அணி வீரர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அணிக்குள் இருந்த குறைபாடுகளை மறந்து வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடனே நாம் போட்டிகளில் கலந்துகொண்டோம். அணிவீரர்கள், அணி முகாமையாளர்கள் என அனைவரும் இணைந்து பெற்ற வெற்றியாகும். கழகத் தலைவர் சபீக் யூசுப் குறைபாடுகளைக் கேட்டு அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்தார். அணியின் செயலாளர் பிரேமதாச மட்டுமல்ல முகாமையிலுள்ள அனைவரும் வெற்றியின் பங்காளிகளே என்றும் பயிற்றியாளர் ரூமி குறிப்பிட்டார்.

கொழும்பு உதைபந்தாட்டக் கழக பயிற்சியாளரான மொஹம்மட் ரூமி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவராவார். இவர் இங்கு கல்வி பயின்று கொண்டிருக்கும் காலத்திலேயே கொழும்புப் பிராந்தியத்தின் பிரபல உதைபந்தாட்டக் கழகமான இரத்தினம் உதைபந்தாட்டக் கழகத்தில் இணைந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அதன் பின் பொலிஸ் விளையாட்டுக் கழகம், விமானப்படை விளையாட்டுக்கழகங்களில் இணைந்து விளையாடிய அவர் இலங்கை தேசிய அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். பிற்காலத்தில் ‘ஓல் ஸஹீரியன்ஸ்’ விளையாட்டுக்கழகத்தின் பயிற்றுவிப்பாளராக இணைந்து கொண்டு அவ்வணியின் வெற்றிக்காக உழைத்தார்.

இம்முறை நடைபெற்ற டயலொக் சம்பியன் லீக் தொடரில் தங்க சம்பாத்தை இறுதிப் போட்டியில் வெற்றிக்கான கோல்லைப் புகுத்திய மொஹம்மட் பஸாலுக்குக் கிடைத்தது. தொடர் முழுவதும் கூடுதலான கோல்களைப் பெற்ற வீரர்களாக ரினோன் உதைபந்தாட்ட அணியின் ஜோப் மைகலும், அப்கன்ரீஸ் உதைபந்தாட்ட கழக அணியின் இமானுவேலும் விருதுகளைப் பெற்றனர். இவர்கள் இருவரும் தலா தொடர் முழுவதும் 16 கோல் வீதம் அடித்திருந்தர். சிறந்த கோல் காப்பாளராக ரினோன் உதைபந்தாட்ட அணியின் மொஹம்மட் ரபீக் தெரிவானார்.

மேலும் கொழும்பு உதைபந்தாட்டக் கழகம் ஆசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தினரால் நடாத்திவரும் ஏ. எப். சி. கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத் தொடரில் முதல் சுற்றில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாக தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கொழும்பு உதைபபந்தாட்ட கழகத் தலைவர் தனது அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவு உட்பட அனைத்து வசதிகைளயும் செய்து கொடுத்து வருடாந்தம் பெரும் தொகைப் பணத்தை உதைபந்தாட்ட வளர்ச்சிக்காக செலவு செய்து வருவதுடன’ அவ்வணி வீரர்களுடன் பயிற்சியின் போதும், சகஜமாக பழகி அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்து அவகைளை நிறைவேற்றுவதுமே அவ்வணியின் துரித முன்னேற்றத்துக் காரணமாகும். இவவ்வணியின் கோல் காப்பு பயிற்சியாளராக இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்திய லலித் வீரசிங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம்.எஸ்.எம்.ஹில்மி

Comments