மது​ரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து | தினகரன் வாரமஞ்சரி

மது​ரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தினால் கோவிலுக்குள் வீர வசந்தராயர் மண்டபம்பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் நேரில்சென்று ஆராய்ந்த பின்னர் இனைத் தெரிவித்துள்ளார்.

மீனாட்சியம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

தீயணைப்புத் துறை அதிகாரிகள் இணைந்து எடுத்த நடவடிக்கையால் தீ முழுமையாக அணைக்கப்பட்டுவிட்டது. இந்த தீ விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரிய வரும்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் காலை வழக்கம் போல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

மீனாட்சியம்மன் கோயிலுக்குள் ஏற்பட்டது தீ விபத்துதான். வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை. இந்த தீ விபத்தினால் வீர வசந்தராயர் மண்டபத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது. அந்த மண்டபத்தில் உள்ள சில தூண்கள் கீழே விழுந்துள்ளன. மேல் தளத்தின் கற்களும் உடைந்து கீழே விழுந்துள்ளன. ஆனால், ஆயிரங்கால் மண்டபம் பாதுகாப்பாகவே உள்ளது.

வீர வசந்தராயர் மண்டபத்தைத் தவிர, கோயிலின் பிற பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கட்டட நிபுணர்களும் உறுதி அளித்துள்ளனர்.

கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயிலுக்குள் சுமார் 150 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 36 கடைகள் சேதம் அடைந்தன, சேத மதிப்பு குறித்து கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.

Comments