இலங்கையின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்று சாதனை BEYOND BIOTEC 2018 | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் உயிரியல் தொழில்நுட்பத் துறையின் வரலாற்று சாதனை BEYOND BIOTEC 2018

இலங்கையின் தனியார் உயிரியல் துறையின் முதலாவது துறைசார்ந்த புதிய தொழில்நுட்ப முயற்சிகளையும் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்கும் நிகழ்வானது இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் வழிநடத்தலுடன் ஜனவரி 25ஆம் திகதி இலங்கை மன்றக் கல்லூரியில் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு இந்தியாவின் அப்பலோ வைத்தியக் குழுமத்தின் துணைத்தலைவர் டாக்டர் பிரிந்தா ரெட்டி மற்றும் நாட்டின் முன்னணி வைத்திய கலாநிதிகள், வைத்தியர்கள், பேராசிரியர்கள், அறிவியல் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பொறியியலாளர்கள் பங்குபற்றினர்.

BEYOND BIOTEC 2018 இந்தியாவின் அப்பலோ வைத்தியக் குழுமத்தினதும் இலங்கையின் Credence Genomics நிறுவனத்தின் கூட்டு முயற்சியின் கீழ் உயர் தொழில்நுட்ப தொற்றுநோயறிதல் மருத்துவ பரிசோதனைகளை இந்திய மக்களிற்கு வழங்குவதற்காக சென்னை, தமிழ்நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆய்வுகூடத்தின் திறப்பினையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.

Credence Genomics இனால் ஏற்பாடு செய்யப்பட்ட BEYOND BIOTEC 2018 அதன் துணை நிறுவனமான Micro Genomics மற்றும் THERMO FISHER SCIENTIFIC நிறுவனங்களினால் அனுசரணையளிக்கப்பட்டது.

Credence Genomics நிறுவனம் 2011 ஆம் ஆண்டு டாக்டர் வாஸ் ஞானம் அவர்களினால் தொடக்கப்பட்டது. இந்நிறுவனம் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் DNA மூலம் தொற்று நோயறிதல் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை உலகிற்கு வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்றது. இந்தியாவில் தனது மருத்துவக் கல்வியைப் புூரத்தி செய்த பின்னர் பிரித்தானியாவின் தேசிய மருத்துவக் குழுமத்தில் சேவையாற்றிய டாக்டர் வாஸ் ஞானம் உயர் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வத்தைக் கொண்டிருந்தார். தனது சுயமுயற்சியின் மூலம் மருத்துவத் துறைக்கு தொழில்நுட்ப உதவியுடன் கூடிய மருத்துவ பரிசோதனைகளை வழங்கும் கனவை BEYOND BIOTEC 2018 மூலம் நனவாகியுள்ளார்.

THERMO FISHER SCIENCETIFIC நிறுவனத்தின் உலகளாவிய சேவை விரிவாக்கல் மற்றும் உயிரியல் துறைசார்ந்த ஆராய்ச்சிகளிற்கான அர்ப்பணிப்பு மற்றும் Credence Genomics நிறுவனத்தின் கூட்டு முயற்சி, அந்நிறுவனத்தின் ஆதரவை BEYOND BIOTEC 2018இற்கு வழங்க முன்வந்துள்ளது.

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் தவிர டாக்டர் திருமதி பிரிந்தா ரெட்டி, பேராசிரியர். ஜெனிபர் பெரேரா, பேராசிரியர். வி. என். சந்திரசேகரன், பேராசிரியர் தீப்தி. சீ. டி. சில்வா, டாக்டர. காயத்திரி,என். சில்வா மற்றும் டாக்டர் வாஸ் ஞானம் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றினர். 

Comments