Crocodile Lankaவின் புதிய காட்சியறை | தினகரன் வாரமஞ்சரி

Crocodile Lankaவின் புதிய காட்சியறை

வாடிக்கையாளர்களுக்கு அதிகமான தெரிவுகள் மற்றும் இலகுவாக சென்றடையக்கூடிய வசதியை வழங்குவதற்காக Crocodile Lanka தனது பிரதான காட்சியறையை 345, டுப்ளிகேஷன் வீதி, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இடம் மாற்றியுள்ளது. மகத்தான தருணத்தைக் கொண்டாடும் வகையில், திறப்புவிழாவன்று மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கொள்வனவிற்கும் கவர்ச்சியான அன்பளிப்புக்களை Crocodile Lanka தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற வர்த்தக நாமமான Crocodile, அரை நூற்றாண்டுக்கும் மேலாக நவநாகரிகத் துறையில் நிலைபெற்றுள்ளது. நாட்டில் அறிமுகமாகிய காலம் தொடக்கம் தனது தனித்துவமான வடிவமைப்புக்கள், உயர் தரம் மற்றும் கட்டுபடியாகும் விலைகள் காரணமாக இந்த வர்த்தகநாமம் இலங்கையின் ஆண்களின் கற்பனையை தன்வசப்படுத்தியுள்ளது. அதிசிறந்த வாடிக்கையாளர் திருப்தியை தொடர்ச்சியாக வழங்கி வருவதன் மூலமாக, நாடெங்கிலும் வாடிக்கையாளர்களின் உள்ளங்களிலும், எண்ணங்களிலும் Crocodile தன்னை உட்பதித்துக் கொண்டுள்ளது. Crocodile வர்த்தகநாமத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் இலங்கையில் அதன் தனித்துவமான அடையாளத்திற்கு இப்புதிய காட்சியறை சான்று பகருகின்றது.

திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட Crocodile Lanka வின் உதவிப் பொது முகாமையாளர் சமல் பொன்சேகா கருத்து வெளியிடுகையில், தைரியமான நவநாகரிக வெளிப்படுத்தலை கொண்டுள்ள Crocodile சமுதாயத்தின் நாடிதுடிப்பு மற்றும் தற்போதைய போக்குகளின் அடையாளத்தை ஒருவர் மீது காண்பிக்கின்றது. அதன் கவர்ச்சியான வடிவமைப்புக்கள் மற்றும் சமகால நாகரிக வடிவங்கள் ஒரு சராசரி மனிதனையும் நவநாகரிக நட்சத்திரமாக மாற்றும் தனித்துவத்தைக் கொண்டுள்ளதுடன், இந்த சிறப்பம்சமே உலகெங்கிலும், உள்ளூர் சந்தையிலும் வெற்றிகரமான வர்த்தகநாமமாக மாற்றியமைத்துள்ளது. Crocodile ஆடையணிகளின் இந்த வெற்றியும், உயர் மட்ட கேள்வியும் எமது பிரதான காட்சியறையை, அதிக இட வசதி கொண்ட, நவீன மற்றும் பிரபலமான இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு எம்மைத் தூண்டியுள்ளன. பெறுமதிமிக்க எமது வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சிறப்பான சேவையை வழங்கி, மகத்தான அளவில் பல்வேறுபட்ட உற்பத்திகள் மற்றும் நவீன பாணிகளை வழங்க இடமளிக்கும் என்றார். 

Comments