ஐ.தே.க அறிமுகப்படுத்திய புதிய முறையினாலேயே அமைதியான தேர்தல் | தினகரன் வாரமஞ்சரி

ஐ.தே.க அறிமுகப்படுத்திய புதிய முறையினாலேயே அமைதியான தேர்தல்

ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்திய புதிய தேர்தல் முறையினாலேயே நேற்றைய தேர்தல் அமைதியாக நடைபெற்றதென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேர்தலை அமைதியாக நடத்துவதற்கு ஒத்துழைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் ஏனைய அதிகாரிக்கும் நன்றி தெரிவிப்பதாகப் பிரதமர் தெரிவித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் நேற்றுக் காலை வாக்களிக்க வந்த பிரதமர், வாக்களித்ததன் பின்னர் கருத்துத் தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டு மிகவும் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக்கூடியதாக இருந்ததென்று தெரிவித்த பிரதமர், இந்தத் தேர்தலை அதனைவிடவும் அமைதியாக நடத்த முடிந்தென்று சுட்டிக்காட்டினார்.

இதுவரைகாலம் நிலவிய விருப்பு வாக்கு முறையின் காரணமாக காணப்பட்ட மோதல் நிலைமை இம்முறை காணப்படவில்லை. இவ்வாறான அமைதியான தேர்தலுக்கு வழிவகுத்தது ஐக்கிய தேசிய கட்சியே. இதன் அனுகூலங்கள் கட்சிக்குக் கிடைக்குமென்றும் பிரதமர் கூறினார். புதிய தேர்தல் முறையின் கீழ் தெரிவாகும் தமது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக்ெகாள்ள முடியும் பிரதமர் தெரிவித்தார். 

Comments