அட்லீக்கு இப்படி ஒரு வாய்ப்பா? | தினகரன் வாரமஞ்சரி

அட்லீக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படம் கொடுத்தால் போதும், அந்த இயக்குனருக்கு அதிர்ஷ்டம் தான். அந்த வகையில் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ.

இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கவிருக்கின்றார் என பேசி வந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அட்லீ ஒரு கதை கூறியிருப்பதாகவும், அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இப்படத்தை தேனாண்டாள் நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகின்றது. இச்செய்தி உண்மை என்றால் ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான். 

Comments