நடிகராக அவதாரம் எடுக்கும் விக்ரம் வேதா தயாரிப்பாளர் | தினகரன் வாரமஞ்சரி

நடிகராக அவதாரம் எடுக்கும் விக்ரம் வேதா தயாரிப்பாளர்

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் ‘விக்ரம் வேதா’. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்த இப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் சஷிகாந்த் தயாரித்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு முன், தயாரிப்பாளர் சஷிகாந்த் ‘இறுதிச்சுற்று’ படத்தையும் தயாரித்திருந்தார்.

இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார். சஷிகாந்த் தற்போது சிவாவை வைத்து ‘தமிழ்ப்படம் 2.O’ படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சஷிகாந்த். இந்த தகவலை இப்படத்தின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் வெளியிட்டிருக்கிறார்.

சஷிகாந்த் தயாரிப்பாளராக அறிமுகமான படம் ‘தமிழ்ப்ப டம்’ என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உருவாகி வரும் ‘தமிழ்ப்படம் 2.O’ படத்தில் சிவாக்கு ஜோடியாக திஷா பாண்டே மற்றும் ஐஸ்வர்யா மேனன் நடித்து வருகிறார்கள். கண்ணன் இசையமைத்து வருகிறார். 

Comments