‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான் | தினகரன் வாரமஞ்சரி

‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்

அஜித்துடன் – சிவா 4-வது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ஆம் திகதி தொடங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவ னம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இதில் அஜித் ஜோடியாக யார் என்பது குறித்து குழப்பம் நீடித்த நிலையில், அஜித் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், படத்தின் வில்லன், மற்ற கதாபாத்திரங்கள் மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதை படக்குழு இன்னமும் வெளியிடவில்லை. இந்த படத்திற்கு இசையமைக்க முதலில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அனிருத், சாம்.சி.எஸ் உள்ளிட்ட பெயர்களும் அடி பட்டன.

இந்நிலையில், டி.இமான் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைக்க இருப்பதாக தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித் படத்திற்கு இசையமைக்கும் டி. இமானுக்கு வாழ்த்துகள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 'டிக் டிக் டிக்’ பட இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைக்கும் பட்சத்தில் அஜித் – இமான் இணையும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments