-ஆயுள் காப்புறுதி வீரர்களை கொண்டாடத் தயாராகிறது IASL | தினகரன் வாரமஞ்சரி

-ஆயுள் காப்புறுதி வீரர்களை கொண்டாடத் தயாராகிறது IASL

இலங்கை காப்புறுதிச் சங்கத்தில் (IASL) அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வைபவத்தில் 2018 ஆம் ஆண்டுக்கான ஆயுள் காப்புறுதி விற்பனை விருதுகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்புறுதி மாதமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட செப்டம்பர் மாதத்தை மாத்திரமே இலக்காகக் கொண்டு விருதுக்கான காலப்பகுதி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிக ழ்ச்சியின் போது, 2018 ஆம் ஆண்டு முதல் இதனை முழு வருடத்திற்கும் ஏற்றவகையில் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயுள் காப்புறுதித்துறை விற்பனை விருதுகள் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டன. அது 2018 ஆம் ஆண்டில் மேலும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆயுள் காப்புறுதி விற்பனை முகவர்களின் தொழில் திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும். ஆயுள் காப்புறுதியை மக்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை மேலும் அதிகரிப்பதிலும், இலங்கை காப்புறுதிச் சந்தையில் பெருந்தொகையான வாடிக்கையாளர்களை இணைத்துக்கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்தக் காலப்பகுதியை ஒரு வருடம் வரை உயர்த்தியிருப்பது ஆயுள் காப்புறுதி விற்பனையில் ஈடுபட்டுள்ளோருக்கு மேலும் சிறந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது.

ஆயுள் காப்புறுதி விற்பனை முகவர் ஒருவர், எப்போதும் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்களையும், இன்னல்களையும் குறிப்பிட்டுக் காட்டும் ஒருவராக இருக்க வேண்டும். அதாவது திடீர் மரணம், பாரிய நோய்கள் என்பன பற்றி மக்கள் மத்தியில் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். எனவே, காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களும் இதுபற்றி பெரிதும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதற்கு மேலதிகமாக ஒரு விபரீதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் காப்புறுதி முகவர் நற்செய்தியைக் கொண்டு வருபவராகக் கருதப்பட வேண்டும். காப்புறுதித் துறையில் விற்பனை முகவர் ஒருவரின் உண்மையான எண்ணம் நம்பிக்கைக்கு உரியவராகவும், வாடிக்கையாளரின் தேவைகளை நன்கு அறிந்தவராகவும் வெறுமனே ஒரு விற்பனையைத் தாண்டிச் சென்ற ஒருவராகவும் இருத்தல் வேண்டும். 

Comments