இலங்கை மக்களின் புன்னகையை உலகிற்கு எடுத்துச் செல்லும் சிக்னல் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மக்களின் புன்னகையை உலகிற்கு எடுத்துச் செல்லும் சிக்னல்

யுனிலீவர் நிறுவனத்தின், வாய்ச்சுகாதார உற்பத்தியான சிக்னல், இலங்கை மக்களின் தனித்துவமான புன்னகையை உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில், முதன்முறையாக புன்னகைத் தூதுவர்களை தெரிவு செய்யும் Sina Bo Wewa 2018’ நிகழ்வினை ஆரம்பித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முக்கியத்துவமிக்க ஒரு நிகழ்வாக, Sina Bo Wewa 2018’ பிரசாரத்தின் மூலம் முதன்முறையாக ஆறு புன்னகைத் தூதுவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். தனது இலக்கினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், பாத்தியா, சந்துஷ், தினாக்ஷி போன்ற பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் மதிப்பிற்குரிய நட்சத்திரங்கள் முன்னிலையில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

சிக்னல் ‘Sina Bo Wewa’ நகர்வல அணியானது காலி, மாத்தறை, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, அனுராதபுரம், தம்புள்ளை, நுவரெலியா, குருணாகல், இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் கொழும்பு அடங்கலாக பல்வேறு பிரதேசங்களுக்கும் சென்று நாடெங்கிலுமிருந்து புன்னகைகளை சேகரித்துக்கொள்ளவுள்ளனர். மேலும் தமது சிறந்த புன்னகைகளை அடுத்தவர்களுக்கும் காண்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அவற்றை 0766555666 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக WhatsApp அல்லது Viber ஊடாகவோ அல்லது சிக்னலின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தின் மூலமாகவோ பகிர்ந்து கொள்ள முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின், பிரிவு மேலாளர் (Oral) திருமதி. இமேஷிகா காரியவசம், நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் எமது மக்களின் புன்னகைகளை திரட்டி, இலங்கை மக்களின் அழகான புன்னகையை முழு உலகிற்கும் எடுத்துச்செல்வதை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இது அமைந்துள்ளது என குறிப்பிட்டார்.

இந்த புன்னகைத் தூதுவர்கள் இலங்கையின் புன்னகையை முழு உலகிற்கும் எடுத்துச் செல்லும் வகையில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய ஆறு கண்டங்களுக்கும் செல்லவுள்ளனர். இதை விட, இறுதிச் சுற்றிற்கு தெரிவாகின்ற 100 பேருக்கு ரூபா 1 மில்லியன் பெறுமதியான பணப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. 

Comments