கோலாலம்பூருக்கான பிரத்தியேகமான சலுகை! | தினகரன் வாரமஞ்சரி

கோலாலம்பூருக்கான பிரத்தியேகமான சலுகை!

கொழும்பிலிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரத்திற்கு ரூபா 12,699 என்ற விசேட விலையில் நேரடி விமான சேவைகளை நடாத்துவது தொடர்பில் எயார் ஏசியா விமான சேவை அறிவித்துள்ளது. 2018 இல் இலங்கையில் அது முன்னெடுக்கவுள்ள பல்வேறு திட்டங்களின் ஒரு பகுதியாக, விமான சேவை இந்த பிரத்தியேகமான ஊக்குவிப்புச் சலுகையை வழங்க முன்வந்துள்ளது.

கோலாலம்பூர் மாநகரிலுள்ள புகழ்பூத்த கவர்ச்சியான சுற்றுலாத் தலங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ‘ஷொப்பிங் அனுபவம், லங்காவி மற்றும் தெரங்கானு போன்ற சொர்க்கபுரிகளான கரையோர நகரங்கள், பினாங்கிலுள்ள யுனெஸ்கோவினால் உலக பாரம்பரிய சுற்றுலாத்தலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாத் தலங்கள், கிழக்கு மலேசியாவிலுள்ள பசுமையான மழைக்காடுகள் மற்றும் மேலும் பல மலேசியாவின் சிறப்புக்களை பிரயாணிகள் கண்டு, அனுபவித்து மகிழும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். தற்போது முதல் 2018 பெப்ரவரி 18 வரை airasia.com என்ற இணையத்தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முற்பதிவுகளுக்கு அல்லது எயார்ஏசியா மொபைல் app மூலமாக தற்போது முதல் 2018 யூலை 31 வரை மேற்கொள்ளப்படும் பிரயாணப் பதிவுகளுக்கு குறைந்த கட்டணச் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

எயார்ஏசியா மலேசியா விமான சேவை நிறுவனத்தின் வர்த்தகத் துறைத் தலைமை அதிகாரியான ஸ்பென்சர் லீ கூறுகையில், எமது விசாலமான மாற்று விமான பயண ஏற்பாடுகள் (ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு குறிப்பிட்ட ஒரு இடத்தின் ஊடாகச் செல்லும்போது நேரடியாக ஒரு விமானத்திலிருந்து அடுத்த விமானத்திற்கு மாறிக் கொள்ளும் வசதி) மற்றும் குறைந்த கட்டணங்களின் பலனாக இலங்கை மக்களை உலகத்துடன் இணைக்கும் இலக்கினை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம்.

கோலாலம்பூர் ஊடாக வேறு மாநகரங்களுக்கு பயணிக்கின்றவர்கள் பினாங்கு, லங்காவி, குச்சிங் மற்றும் கொட்ட கினபாலு போன்ற, தவற விடாது கட்டாயமாக சுற்றிப் பார்க்க வேண்டிய மலேசிய நகரங்களுக்கு சென்று ஆசியாவின் சிறப்புக்களை அனுபவிக்க முடியும். மேலும் ஆசியான் அமைப்பின் கீழுள்ள பல்வேறு நாடுகள் சீனா, ஜப்பான், மாலைதீவு, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு மகத்தான நாடுகளின் அனுபவங்களை பிரயாணிகள் மலேசியாவிலிருந்து சில மணித்தியாலங்களில் சென்றடையவும் முடியும். 

Comments