பீட்டர்ஸ்பர்க் பகிரங்க டென்னிஸ்: | தினகரன் வாரமஞ்சரி

பீட்டர்ஸ்பர்க் பகிரங்க டென்னிஸ்:

ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகிரங்க மகளிர் டென்னிஸ் போட்டித் தொடரில் செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா சம்பியன் பட்டம் வென்றார்.

மகளிருக்கான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டித் தொடர் போட்டிகள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இதன் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நடப்பு சம்பியனான பிரான்சின் கிறிஸ்டினா மிளாடெனோவிச்சும்,

செக் குடியரசின் பெத்ரா குவித்தோவாவும் மோதினர்.

இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய குவித்தோவா முதல் செட்டை 6-1 என எளிதாக கைப்பற்றினார்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் குவித்தோவா ஆதிக்கம் செலுத்தினார். அந்த செட்டையும் குவித்தோவா 6-2 என கைப்பற்றினார். இதன்மூலம் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற குவித்தோவா சம்பியன் பட்டம் வென்றார்.

இது குவித்தோவா பெறும் 21-வது டபுள்யு.டி.ஏ (WTA) பட்டம் ஆகும். மேலும், ரஷ்ய டென்னிஸ் தொடர்களில் சம்பியன் பட்டம் வென்ற முதல் இடது கை வீராங்கனை என்ற பெருமையும் குவித்தோவாவுக்கு கிடைத்துள்ளது 

Comments