வடக்கில் நிர்மானிக்கப்படவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம் | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் நிர்மானிக்கப்படவுள்ள முதலாவது சர்வதேச கிரிக்கெட் மைதானம்

(மொஹமட் றிஷாட்)

இலங்கையின் பெயரை உலக அளவில் பிரபல்யமடையச் செய்த விளையாட்டாக கிரிக்கெட் விளங்குகின்றது. 1996 உலகக்கிண்ண கிரிக்கெட் சம்பியன்களாக இலங்கை அணி முடிசூடிக்கொண்டதையடுத்து உலகம் பூராகவும் இலங்கை யின் நாமம் பேசப்பட்டதுடன், கிரிக்கெட்டில் புதிய பரிணாமும், வளர்ச்சியும் ஏற்பட்டது. இதன்காரணமாக கிரிக்கெட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டதையடுத்து சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களும் உருவாகியது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட்சபை பொலன்னறுவை மற்றும் யாழ்ப்பாணத்தில் 2 சர்வதேச கிரிக்கெட் மைதானங்களை நிர்மானிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த வருடம் மேற்கொண்டிருந்தது. இதன்முதல் கட்டமாக உள்ளுர் போட்டிகளை நடத்துகின்ற தேசிய மைதானமாகவும், 2ஆவது கட்டமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துகின்ற மைதானங்களாகவும் இவை நிர்மாணிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படியாழ் மாவட்டத்தில் மண்டை தீவுப்பகுதியிலும், பொலன்னறுவை, ஹிங்குராங்கொடை பிரதேசத்திலும் தலா 100 மில்லியன் ரூபா செலவில் இவ்விளையாட்டு மைதானங்கள் நிர்மானிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டன.

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் நாடாக விளங்கும் இலங்கையில் கடந்த 30 வருடகாலமாக நிலவிய யுத்த சூழ்நிலையினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிரிக்கெட் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாமல் போனதுடன், திறமை யான வீரர்களையும் இனங்கண்டு கொள்ள முடியாமல் போனமை இந்நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகரான திலங்க சுமதிபால, இலங்கை கிரிக்கெட்நிறுவனத்தின் தலைமைத்துவத்தை கடந்த 2015ஆம்ஆண்டு பொறுப்பேற்றது முதல் பல வருடங்களாக தடைப்பட்டிருந்த இந்நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்தியும், அவற்றை முன்னெடுத்தும் வருகின்றமையும் அனைவராலும் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைப்பது தொடர்பில் பலவருடங்களாக ஆராயப்பட்டு வந்தது. ஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி, பொன்னாலைச் சந்திக்கு அண்மையாக உள்ள திடல் உள்ளிட்ட இடங்கள் இதற்காக முன்மொழியப்பட்டிருந்தன. எனினும் அவை ஆராயப்பட்டுசில காரணிகளால் கைவிடப்பட்டன. இந்தநிலையில் மண்டைதீவில் பெரும் திடல்முன்மொழியப்பட்டது.

இதனையடுத்து திலங்க சுமதிபால தலைமையிலான இலங்கை கிரிக்கெட்நிறுவனம், நீண்டகால முயற்சிகளின் பிரதிலானாக யுத்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட யாழ்.குடாநாட்டில் கிரிக்கெட் வசந்தத்தை கொண்டு வருவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையினை கடந்த வருடம் யாழ்.மண்டைத்தீவுப் பகுதியில் ஆரம்பித்துவைத்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மண்டை தீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட்நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான குழுவினர் கடந்தமாதம் 27ஆம்திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்ததுடன், மண்டைதீவுக்குச்சென்று கிரிக்கெட் மைதானம் அமைக்கும் இடத்தைப் பார்வையிட்டனர்.

இது தொடர்பில் திலங்க சுமதிபால கருத்து தெரிவிக்கையில், மண்டை தீவில்வடக்கின் விளையாட்டு நகரம் அமைக்கப்படவுள்ளது. சர்வதேச கிரிக்கெட் மைதானத்துடன் உடற்பயிற்சி மையம், நீச்சல் தடாகம் உள்ளிட்டவையும் அமைக்கப்படும். இங்கு கால்பந்தாட்டம், கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், ரக்பி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்ததுவதற்கான வசதிகள் செய்யப்படும்.

Comments

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.