யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2018 இன் நிர்மாண தீர்வுகள் வழங்குநராக INSEE சீமெந்து | தினகரன் வாரமஞ்சரி

யாழ் சர்வதேச வர்த்தக சந்தை 2018 இன் நிர்மாண தீர்வுகள் வழங்குநராக INSEE சீமெந்து

இலங்கையின் முன்னணி சீமெந்து வர்த்தக நாமங்களான INSEE (இன்சி) மஹாவலி மறீன் மற்றும் INSEE சங்ஸ்தா சீமெந்து தயாாிப்புகளை உற்பத்தி செய்யும் INSEE சீமெந்து நிறுவனமானது ஜனவரி 26ம் திகதி முதல் 28ம் திகதி வரை யாழ்ப்பாண நகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாழ். சர்வதேச வர்த்தக சந்தை 2018ன் உத்தியோகபூர்வ நிர்மாண தீர்வுகள் வழங்குநராக கைகோர்த்திருந்தது. இதனுௗடாக துரிதமாக அபிவிருத்தியடைந்து வரும் வட பிராந்தியத்தில் பெருமளவு தெரிவுக்குரிய சீமெந்து வர்த்தக நாமமாக தனது நிலையை மேலும் சக்திப்படுத்தியுள்ளது.

யாழ். சர்வதேச வர்த்தக சந்தை நிகழ்வுடன் INSEE சீமெந்து தொடர்ச்சியாய் மூன்றாவது ஆண்டாகவும் கைகோர்த்திருந்தது. வட பிராந்தியத்தில் முன்னெடுக்கப்படும் மாபெரும் நுகர்வோர் மற்றும் வர்த்தக சந்தையாக இந்நிகழ்வு அமைந்துள்ளதுடன், குடாநாட்டில் இடம்பெறும் துரித அபிவிருத்தி செயற்பாடுகளில் அவசியமான நிர்மாண தீர்வுகளை புத்தாக்கமான ரீதியில் பெற்றுக்கொடுப்பதை இந்த சந்தை நிகழ்வில் ஒரு நோக்கமாய் INSEE சீமெந்து கொண்டிருந்தது. யாழ். சர்வதேச வர்த்தக சந்தை 2018 நிகழ்வில் பங்கேற்றிருந்த 30,000க்கும் அதிகமான நுகர்வோர், விநியோகத்தர், பிரதான அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் பொது மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளுடன் INSEE சீமெந்து நிறுவன அங்கத்துவர்கள் சந்தித்து பல்தரப்பட்ட உரையாடல்களை பேணியிருந்தது. நிகழ்வின் ஒரு அங்கமாக, யாழ் வாழ் மக்களுக்கு ஐளுேநுநு சீமெந்தின் நவீன மேம்பாடுகள் மற்றும் பரந்தளவு தீர்வு தெரிவுகள், உயர் வினைத்திறன் வாய்ந்த சீமெந்துகள், சீமெந்து தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கமான CONWOOD தயாரிப்புகள் பற்றிய அறிமுகங்களை வழங்கியிருந்தது.

CONWOOD தயாரிப்புகள் கட்டடக்கலை மற்றும் அலங்கார மூலப்பொருளாக அமைவதுடன், வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் மரப்பொருட்களுக்கு மாற்றீடாக அமைந்துள்ளது. நவீன சுவிஸ் தொழில்நுட்பத்துடன் இணைந்து உயர் தரமான மூலப்பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த தயாரிப்பு, யாழ். சர்வதேச வர்த்தக சந்தை 2018ல் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

Comments