வித்தியாசமான தோற்றத்தில் | தினகரன் வாரமஞ்சரி

வித்தியாசமான தோற்றத்தில்

உடம்பை வருத்தி நடிக்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை விரும்பும் நடிகர்கள் பட்டியலில் மோகன்லாலும் இருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த புலிமுருகன் படம் தேசிய அளவில் பேசப்பட்டு விருதுகளை அள்ளியது. சிறந்த சண்டை பயிற்சிக்கான தேசிய விருதும் பெற்றது. தமிழிலும் இந்த படம் வெளியானது.

அங்கிள்பன் படத்தில் உடம்பை குண்டாக்கி நடித்தார். பரதம், கமலதலம் உள்பட பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டும்படி அமைந்தது. தற்போது ‘காயங்குளம் கொச்சுன்னி’ என்ற மலையாள படத்தில் கொள்ளைக்காரர் வேடத்தில் நடிக்கிறார். சரித்திர காலத்தில் வசதி படைத்த செல்வந்தர்களிடம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு வாரி வழங்கி மக்கள் மனதில் இடம்பிடித்த கொச்சுன்னி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

கொள்ளைக்காரர் கதாபாத்திரத்தில் நடிக்கும் மோகன்லால் தோற்றம்.

இதில் மோகன்லாலும் நிவின்பாலியும் இணைந்து நடிக்கின்றனர். இருவருமே கொள்ளையர்கள் கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மோகன்லால் இத்திக்கர பக்கி என்ற கொள்ளையர் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்காக தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். மோகன்லால் கொள்ளைக்காரராக நடிக்கும் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. 

Comments