எனக்ெகன்றால் ஓர் ஐமிச்சமாத்தான் இருக்கு! | தினகரன் வாரமஞ்சரி

எனக்ெகன்றால் ஓர் ஐமிச்சமாத்தான் இருக்கு!

'ஆருக்கும் எந்தத் தொந்தரவும் குடுக்காம கண்ணை மூடிவிட வேண்டும்' என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறம். அவர்கள் அப்பிடி தொந்தரவில்லாமல் கண்ணை மூடினாலும், ஆஸ்பத்திரி ஆக்கள் விட்டு வைக்க மாட்டாங்க என்றது எல்லோருக்கும் தெரியும். அதுவும் தமிழாக்களா இருந்தால், இன்னும் சிரமம்தான் என்கிறார் நண்பர். தமிழரா பிறக்கவும் கூடாது சாகவும் கூடாது என்று ஆதங்கப்படுகிறார் அவர்!

கடந்த வாரம் மலைநாட்டுப் பகுதியில உள்ள ஓர் ஆஸ்பத்திரியிலை நடக்கிற அக்கிரமங்களைப் பற்றிச் சொல்லியிருந்தம். அத்தோட கிழக்கிற்குப் போற வழியிலை உள்ள ஆஸ்பத்திரியிலை கிடைச்ச ஓர் அனுபவத்தை நண்பர் சொன்னார்.

வெலிக்கந்தை மட்டுமில்லை, வாழைச்சேனை, மட்டக்களப்பு பகுதியிலையோ கல்முனை பகுதியிலையே இருந்து வந்து இந்த ஆஸ்பத்திரியிலை செத்தால் அவ்வளவுதான்! ஏன் என்ன பிரச்சினை என்று நண்பரைக் கேட்டதற்கு,

சில வாரங்களுக்கு முந்தி வெலிக்கந்தை பகுதியிலை ஒரு விபத்து. மன்னாருக்கு வியாபாரத்திற்குப் போற வழியிலை அவங்க போன லொறி விபத்திலை சிக்கியிருக்கு. ரெண்டுபேரும் கல்முனை ஆக்கள். அவங்கள உடனடியாக இந்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருக்கிறாங்க. அங்கு ஒருவருக்குக் கடும் சீரியஸ்! ஊரவங்க, உறவுக்காரவங்க எல்லாரும் வந்து சேர்ந்திட்டாங்க. ஆனால், அந்தக் கடுமையாகக் காயம்பட்டவருக்கு எந்த ட்ரீட்மன்றும் இல்லையாம். ஏனென்று கேட்டால், அவருக்குக் கொஞ்சம் பிரச்சினை! அதாவது கொஞ்சம் அல்ல, நல்லாவே பிரச்சினை; மூளையிலை இரத்தம் கசிஞ்சிட்டுது. ஸ்கேன் றிப்போர்ட் எல்லாத்தையும் அனுராதபுரத்திற்கு அனுப்பினநாங்க, ஆனால், இவரை அங்கக் கொண்டு பொயித்து ஒபரேஷன் செய்தும் வேலை இல்லை எண்டு ஷொல்லிட்டாங்க. அதுதான் பார்த்திட்டு இருக்கிறம்.

வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் இது! சொந்தக் காரவங்களுக்குக் கடைசி வரை நம்பிக்ைக போகல. அவங்க விடிய விடிய ஓட்டோவிலையும் றோட்டிலையும் காத்திருக்கிறாங்க. ஆனால், விடியப்புறம் ரெண்டரை மணிக்கு ஆஸ்பத்திரி ஆக்கள் சொன்ன செய்தி, அவர் மோசம் போயிட்டார், என்று. பிறகு உறவுக்காரவங்க எல்லாரும் குளறி ஒப்பாரி வைச்சு அழுதுபுலம்பி, ஊர்ல மற்றவங்களுக்கும் சொல்லியிருக்கிறாங்க. செத்துப்போனவருக்குக் கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தரம் பயிலும் பிள்ளைகள் ரெண்டுபேர் இருக்கிறவங்க. இன்னும் ஓரிரு வாரத்திலை குடும்பத்திலை ஒருத்தருக்குக் கல்யாணம். அதற்கான சகல ஏற்பாடுகளையும் இவர் தான் செய்து முடித்திருக்கிறார். வீட்டாக்களுக்கு எப்பிடி இருக்கும்?!

நடந்தது நடந்துபோச்சு, என்று மனத்தைத் தேற்றிக்ெகாண்டு இறந்தவரின் சடலத்தைக் கொண்டுபோக கேட்டிருக்கிறாங்க. நீங்க கொண்டு போங்களன் பார்ப்பம், என்றமாதிரி ஆஸ்பத்திரி ஆக்கள் நடந்துகொண்டிருக்கிறாங்க. விடியப்புறம் ரெண்டரை மணிக்கு இறந்தவரோட சடலத்தை அன்றைக்கு அந்தியாகியும் குடுக்கலயாம். அடுத்த நாள் பின்னேரந்தான் குடுத்திருக்கிறாங்க! கல்முனையிலிருந்து வந்து பொலநறுவையிலை இரண்டு நாள் அலைக்கழியிறதெண்டால், நினைச்சுப்பாருங்க. இரண்டு நாள் 'பொடி'யை வைச்சு என்ன செய்தாங்க என்றதுதான் தெரியல. இதப்பற்றியெல்லாம் கேள்வி கேட்குறத்துக்கு யார் இருக்கிறார்?

எக்ஸிடன்ரிலை காயப்பட்டவர் பிழைக்கிறது கஷ்டம்! சொந்தக் காரங்க விரும்பினால், அவரோட அவயவங்களத் தானமாகக் குடுக்கலாம். அதப்பற்றி வேண்டுமென்றால், வந்து கதைக்கச் சொல்லுங்க என்று ஒரு நர்ஸ் சொன்னாவாம். இது அவர் மோசம் போனதாக அறிவிக்கிறத்துக்கு நாலைஞ்சு மணித்தியாலத்திற்கு முந்தி! மோசம் போனதாக அறிவிச்சாப்பிறகு சரியா 24 மணித்தியாலத்திற்கு மேலாக உடலை ஆசுப்பத்திரியிலையே வைச்சிருந்திருக்கிறாங்க! எனக்ெகன்றால், கொஞ்சம் ஐமிச்சமாகத்தான் இருக்கு என்று சொல்றார் நண்பர் வழக்கம்போல! அவருக்கு இப்பிடியான சமுசயங்கள், ஐமிச்சங்கள் வாறது வழக்கம் எண்டாலும், அதைச் சும்மா விடவும் முடியேல்ல. ஏனென்று சொல்லிச் சொன்னால், இதுக்கு முந்தி நடந்த ஓரிரண்டு எக்சிடன்டுகள்ல கடுங்காயமடைஞ்ச ஒரு பொடியனோட அவயவங்கள ஆரோ ஒரு பெண்ணுக்குத் தானமாகக் குடுத்ததா பேப்பரிலை படிச்சிருக்கன்.

இங்க அப்பிடி நடக்க வாய்ப்பில்லைதான். எண்டாலும், ஏன் வைச்சு மினக்கெடுத்துவான்? முதல் நாள் விடியற்காலையிலை இறந்திருந்தால், அன்றைக்கு அந்திக்காச்சும் குடுங்கடாப்பா சடலத்தை. ஏன் லேற் என்று கேட்டதற்கு, சட்ட வைத்திய அதிகாரி இல்லையென்று றீசன் சொல்லியிருக்கிறா நர்ஸ் அக்காள்! இது ஏற்றுக்ெகாள்ளக்கூடிய றீசனா எனக்ெகண்டால் படல்ல... என்று தர்க்கஞ் செய்யிறார் நண்பர். அப்படிப்பார்த்தால், மற்றவங்களுக்கு... அதாவது உடனடியாகச் சடலங்களைக் குடுத்தே ஆகவேண்டும் என்றவங்களுக்கு என்ன செய்வாங்க? கொரனல் இல்லையயென்று சொல்லிப்போட்டு விட்டிடுவாங்களோ! ஒன்று ஏதோ நடந்திருக்கு, இல்லாட்டிக்கு எங்கடை சனத்தைக் கணக்ெகடுக்காமல் ஆசுப்பத்திரி ஆக்கள் நடந்திருக்கிறாங்கள் என்றதுதான் அர்த்தம்.

அவருக்கு நான் கடைசியா சொன்ன அட்வைஸ், சரி... இப்பத்தான் இந்த றைட் ரூ இன்போமேஷன் அக்ற் இருக்ேக. அதான், தகவல் அறியும் உரிமைச் சட்டம்! அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஆசுப்பத்திரிக்கு எழுதிக்ேகளுங்கள் ! மனிசன் சத்தம் போடாமல் போயிற்றார்!

Comments