எயார்டெல் உடன் கைகோர்த்துள்ள களனி பல்கலைக்கழகம் | தினகரன் வாரமஞ்சரி

எயார்டெல் உடன் கைகோர்த்துள்ள களனி பல்கலைக்கழகம்

பட்டதாரி மாணவர்கள் வர்த்தக உலகின் நுணுக்கங்களை அறிந்துகொள்ள உதவுகின்ற ஒரு இணைந்த கல்வி மற்றும் தொழிற்துறை பணி அனுபவ வெளிப்பாட்டு நிகழ்ச்சித்திட்டமே தொழிற்துறை பங்குடமை நிகழ்ச்சித்திட்டமாகும். எயார்டெல் தொழிற்துறை பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் களனி பல்கலைக்கழகத்தின் வர்த்தக மற்றும் முகாமைத்துவ கற்கைபீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவின் பட்டதாரி மாணவர்களுக்கு வாய்ப்பினை வழங்க எயார்டெல் தற்போது முன்வந்துள்ளது.

தொடர் அனுபவ அடிப்படையிலான கற்கைகள் மற்றும் அணிச் செயற்திட்டங்களினுௗடாக களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர்கள் தங்களது மென் திறமைகள் மற்றும் வர்த்தகத்துறை மதிநுட்பம் ஆகியவற்றை பட்டை தீட்டிக்கொள்ளும் வாய்ப்பினை உள்ளடக்கியுள்ள ஒரு ஒத்துழைப்பு பணி அனுபவத்தை இந்நிகழ்ச்சித்திட்டம் வழங்குகின்றது.

“சந்தையில் கால்பதிப்பதற்கு தயாராக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான கேள்வி அதிகரித்துச் செல்வது இலங்கையில் முக்கியமானதொரு தேவையாக மாறி வரும் நிலையில், களனி பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பிரிவுடன் பங்குடமையை ஏற்படுத்தியுள்ளதன் மூலமாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்து புதிதாக வெளியேறுகின்றவர்களுக்கும், சந்தையில் முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ள பட்டதாரிகளுக்கும் இடையில் காணப்படுகின்ற திறன் சார்ந்த இடைவெளியை நிரப்ப முடியும் என நாம் நம்புகின்றோம்” என்று பார்தி எயார்டெல் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜினே‘் ஹெக்டே குறிப்பிட்டார். “வழங்கப்படுகின்ற கல்வியின் தரத்திலேயே ஒரு நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ள நிலையில், கல்வியை முழுமையான ஒரு அணுகுமுறையுடன் முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்க வேண்டியது எமது பொறுப்பாகும்” என அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

இலங்கையிலுள்ள முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற களனி பல்கலைக்கழகம், பல்வேறு கல்வித்துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப்படிப்பு கற்கைநெறிகளை வழங்கி வருகின்றது.

17 நாடுகளில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மூன்றாவது ஸ்தானத்திலுள்ள மிகப் பாரிய மொபைல் தொழிற்பாட்டு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற பார்தி எயார்டெல் நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனமான பார்தி எயார்டெல் லங்கா, முதன்முதலாக ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற மைக்கல்லை எட்டியிருந்த அதிவேக வலையமைப்பு என்ற தனித்துவமான பெருமையுடன், இளம் தலைமுறையினர் மத்தியில் தனது வளர்ச்சிப்போக்கினை தொடர்ந்தும் நிலைநாட்டி வருகின்றது. 

Comments