கண்டி சிட்டி சென்ரரில் The Body Shop விற்பனை நிலையம் | தினகரன் வாரமஞ்சரி

கண்டி சிட்டி சென்ரரில் The Body Shop விற்பனை நிலையம்

பிரித்தானியாவின் புகழ்பெற்ற அழகியல் தயாரிப்புகளின் வர்த்தக நாமமான The Body Shop, இலங்கையில் தனது மூன்றாவது விற்பனை நிலையத்தை திறந்துள்ளது. கண்டி சிட்டி சென்ரரில் இந்த புதிய விற்பனை நிலையம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

கண்டி L3 33B, கண்டி சிட்டி சென்ரர், ஸ்ரீ விக்ரம ராஜசிங்க மாவத்தையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் The Body Shop, இலங்கை பணிப்பாளர் ட்ரெவர் ராஜரட்னம் கலந்து கொண்டார். தனது உரையின்போது இலங்கையில் The Body Shop இன் இரண்டு வருட கால பயணம் தொடர்பில் விளக்கியிருந்தார்.

அத்துடன், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அழகுசாதன தயாரிப்புகள் வர்த்தக நாமம் இலங்கையில் குறுகிய காலத்தில் மக்கள் அபிமானத்தை பெற்றுள்ளமை தொடர்பில் விளக்கியிருந்ததுடன், நிறுவனத்தினால் சமூகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்த பல செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். The Body Shop தனது முதலாவது விற்பனை நிலையத்தை அலெக்சான்டரா பிளேஸில் அமைந்துள்ள ஒடெல் விற்பனை தொகுதியில் நிறுவியிருந்தது. அதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது காட்சியறையை பகதலே வீதியில் திறந்திருந்தது. தற்போது மூன்றாவது விற்பனை நிலையம் கண்டி சிட்டி சென்ரரில் நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சகல The Body Shopகளிலிருந்தும் முழு The Body Shop தெரிவுகளையும் கொள்வனவு செய்யலாம்.

இதில் புகழ்பெற்ற தெரிவுகளான Tea Tree range, Expert Facial Masks, Vitamin E range, Almond Milk and Honey Range, Pomegranate range, Drops of Youth and Drops of Light range மற்றும் The Body Shop இன் மேக்அப் தெரிவுகள் போன்றன அடங்கியுள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையுடன் தமக்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்து கொள்ள முடியும். நெறிமுறையான சரும பராமரிப்பு எனும் கொள்கையின் பிரகாரம் The Body Shop இயங்கி வருகிறது.

Comments