LiCC Jeans உடன் இணைந்து தாய் சேய் ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டி 2018 | தினகரன் வாரமஞ்சரி

LiCC Jeans உடன் இணைந்து தாய் சேய் ஆடை அலங்கார வடிவமைப்பு போட்டி 2018

 மிகவும் எதிர்பார்க்கப்படும் தாய் மற்றும் மகளிற்கான பேஷன் நிகழ்ச்சியான Chokolaate Mother Daughter Fashion Designer Contest தொடர்ச்சியாக 9வது தடவையாகவும் LiCC Jeans உடன் இணைந்து நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியானது 26ம் திகதி மே மாதம் சனிக்கிழமை அன்று SLECCல் நடைபெறவுள்ளது.

கடந்த வருடங்களில் வடிவமைக்கப்பட்ட பேஷன் ஆடைகளைப் போலவே இவ்வருடமும் சாதாரண, விளையாட்டு மற்றும் மாலைநேர ஆடைகளை தாய் மற்றும் மகள் இருவருக்கும் வடிவமைப்பதே இந்த கண்சாட்சியின் நோக்கமாகும். இந்த பேஷன் ஷோவிற்கான தனித்துவமான எண்ணக்கருத்தானது மூன்று பிள்ளைகளின் தாயான Chokolaateன் நிர்வாக ஆசிரியர் மிஷேல் குணசேகர வேயாகும்.

டெனிம் ஆடைகளின் முன்னோடியான LiCC Jeans இப்போட்டியின் தலைமை நிதி வழங்குனராக செயற்படுவதுடன் இந்த ஷோவின்போது ஒரு சிறப்பு அம்சத்தின் மூலம் தங்களது பிராண்டை இவர்கள் காட்சிப்படுத்துவர். உத்தியோகபூர்வ ஒப்பந்தமானது Chokolaate மற்றும் LiCC இடையில் அண்மையில் கைச்சாதிடப்பட்டது.

இப்போட்டிக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் எனும் இணையத்தளத்திலிருந்து தரவிறக்கப்படலாம் அல்லது [email protected]. எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். 8 ஆம் திகதி மார்ச் மாதம் 2018 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

பேஷன் மற்றும் ஆடை தொழிற்துறைகளில் பிரசித்திபெற்ற நிபுணர்கள் குழாமின் மூலமாக இந்த பேஷன் மற்றும் ஆடை தொழிற்துறைகளில் பிரசித்திபெற்ற நிபுணர்கள் குழாமின் மூலமாக இந்தவருட போட்டிக்கான பன்னிரெண்டு இறுதிப் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவதுடன் வெற்றியாளர் இறுதிப்போட்டியில் போது நடுவர் குழாமினால் தெரிவு செய்யப்படுவார். Rozanne Diasz அவர்களினால் தாய் மற்றும் மகளிற்கான நடைப்பயிற்சியானது பயிற்றுவிக்கப்படுவதுடன் சிகை மற்றும் ஆடை அலங்காரங்கள் Salon Chrissy Rozairo மூலமாக கையாளப்படும். இப்போட்டியின் உத்தியோகபூர்வ புகைப்படப்பிடிப்பாளராக Praveen Mirando வும் உத்தியோகபூர்வ ஒளிப்பதிவாளராக Radicalz. Revport உம் செயற்படுவர்.

Comments