இது தான்காதல்... | தினகரன் வாரமஞ்சரி

இது தான்காதல்...

இறைவன் இரகசியம் எனும்  
இதயத்தை கண் விழிகளின் காட்சியில்  
இரகசியமாக இயங்க செய்துள்ளான் – அது  
முதன் முதலில்  
கண்ணும் கண்ணும் பேச வைத்து  
கூத்தாடும்  
உள்ளம் இதில் உண்மையிலேயே,  
ஊமையாகிவிடும் – ஆனால்  
இதயம் இரு விழிகளையும் தூங்கவிடாது  
இரு விழிகளின் காட்சி விம்பம்  
இதயத்தை தூங்க விடாது  
இதயம் இருவரிடையே இடம் மாறி  
உன் இதயம் என்னிடம்  
என் இதயம் உன்னிடம்  
என்று துடிக்கத் தொடங்கும்  
இங்கே காதல் தளிர் விடும்  
அவயவங்கள் அறிவு, திறமை  
ஆகியன தாக்கச் செலுத்தும், மேலும்  
தாக்கம் செலுத்த வைக்கும்  
போதாக்குறைக்கு உணர்ச்சிகளை  
உண்டாக்கும் – அதுவே  
ஒருவரை ஒருவர் காதலிக்கும் – ஆனால்  
இவர்கள் தன் சுயத்தை  
இதற்கு முன் காதலித்து  
அவர்கள் அவர்கள் காதலித்து  
காதலுக்குள் புதைந்திருக்கும்  
இரகசியம் தெரியும் வரை காதலித்து,  
காதலில் இரண்டு உண்டு  
என்பதை புரிந்து கொள்ள வேண்டும்  
காதலிலுள்ள உறவு, பிரிவு, இரண்டிலும்  
இன்பம் காணுதல் வேண்டும்  
காதல் கடல் அலை போல் ஓயாது  
இது யாவருக்கும் ஓர் அத்தாட்சி  
நம் முன்னோர் காதலுக்கு சாட்சிகள்  
சாட்சிகள், காட்சிகளாக  
தெரியும் வரை காதலி – இருந்தும்  
காதலும் புறக்கணிக்கப்படும் என்பதும்   
உண்மை - இருந்தும்  
அப்போது காதல் பரிகாசம் செய்யும்  
எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை சிறைவாசம்  
நரக வாழ்க்கை என பல பரிணமிக்கும்  
துன்பம் தான் காதலில் எல்லை- அப்போது   
நீ மடமை (தற்கொலை) 
எனும் மலை உச்சிக்கு  
ஏறுவதை விட,  
சமதரையில் சமாதானமா நடந்து  
கொண்டேயிரு,  
உன்னை காதலிக்கும் அளவு வரை  
 

Comments