பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இராணுவத் தளபதி விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு இராணுவத் தளபதி விஜயம்

ஸாதிக் ஷிஹான்

 

கண்டி மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நிலைமையை சுமுகமாக்கும் ​நோக்குடன் சகல மதத்தலைவர்கள், தமிழ், முஸ்லிம், சிங்கள வர்த்தக சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களை அழைத்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவருகிறார்.

கண்டியில் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கும் மேலாக தங்கியிருக்கும் அவர் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்தும்

சேதமாகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பதினான்கு பள்ளிவாயல்கள் முற்றாகவும், பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, தெல்தெனிய சம்பவத்தில் உயிரிழந்த லொறிச்சாரதியின் மாற்றுத்திறன்கொண்ட பிள்ளை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமருடன் அமைச்சர்களான ரவூப் ஹகீம், எம்.எச்.ஏ. ஹலீம், லகஷ்மன் கிரியெல்ல, ருவன் விஜேவர்தன, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

பின்னர் இவர்கள் கண்டி செயலகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு சபைக் கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பிரதமர் அங்கு அதிகாரிகளிடம் மேலும் தெரிவித்தாவது,-

பாதிக்கப்பட்ட சகலருக்கும் மிக விரைவாக நட்டஈடுகள் வழங்க்கப்பட வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் (16) இதற்கான நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டார்.

இதுவரை கிடைத்த புள்ளி விபரங்களின் படி 465 நபர்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதில் 14 பள்ளிவாசல்கள் பிரதானமாகக் குறிப்பிடலாம். ஒரு பள்ளிவாசல் முழுமையாக தாக்கப்பட்டுள்ளது.

6 பள்ளிவாசல்கள் பகுதி அளவிலும் 7 பள்ளிவாசல்கள் சிறிய அளவிலும் தாக்கப்பட்டுள்ளன.

கட்டடங்களைப் பொறுத்தவரை 87 கட்டடங்கள் பூரணமாகவும் 196 பகுதி அளவிலும் 182 கட்டடங்கள் சிறிய அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இவற்றுக்கான மதிப்பீடுகளை உடன் மேற்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார். அத்துடன் சுற்றுலாத்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுலாத்துறையை மட்டும் நம்பி செயற்படும் பலரது அன்றாட ஜீவனோபாய வழி முறைகள் சவாலுக்குட்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அத்துடன் மூன்று உயிரிழப்புக்கள் இடம் பெற்றுள்ளதாகவும் அவற்றுக்காக உடன் தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கும்படியும் இதனை 4 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இங்கு கருத்து வெளியிட்ட மத்திய மாகாண முதலமைச்சர், தெல்தெனியவில் மரணமடைந்தவரது குடும்பம் அனாதரவான நிலையில் காணப்படுவதாகவும் அதேபோல் அம்பதென்ன பகுதியில் மரணமடைந்தவரது மனைவி கற்பிணியாக இருப்பதுடன் 5ஆம் வகுப்பு கல்வி கற்கும் பிள்ளை ஒன்று இருப்பதாகவும் அவர்களுக்கும் துரிதமாக வாழ்வாதார வழி முறை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

 

Comments