புத்தாண்டை முன்னிட்டு AirAsia வழங்கும் இலவச ஊக்குவிப்புத் திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

புத்தாண்டை முன்னிட்டு AirAsia வழங்கும் இலவச ஊக்குவிப்புத் திட்டங்கள்

AirAsia மற்றும் AirAsia X ஆகியன ஆண்டில் முன்னெடுக்கும் முதலாவது பாரிய ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, 5 மில்லியன் ஆசனங்களில் பயணிக்கும் வாய்ப்பை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

2018 செப்டெம்பர் 03ம் திகதி முதல் 2019 மே 28ம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் பயணிப்பதற்கு, 2018 மார்ச் மாதம் 05 ஆம் திகதி (0001h GMT +8) முதல் 2018 மார்ச் (2359 GMT +8) 11ஆம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்வதனூடாக இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம். இக்காலப்பகுதியில் கோலாலம்பூருக்கு பயணிப்பதற்கு 13990 ரூபாய் எனும் குறைந்த விமான கட்டணம் அறவிடப்படுவதுடன், சிங்கப்பூர், லங்காவி, பாங்கொக், மெல்பேர்ன், பாலி மற்றும் இதர பல பகுதிகளுக்கும் குறைந்த கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. மலேசியாவின், கோலாலம்பூர் நகரிலுள்ள விமான மாற்று பகுதியினூடாக பயணிக்க முடியும்.

AirAsia BIG அங்கத்தவர்களுக்கு, airasia.comAirAsia mobile app அல்லது airasiabig.com ஊடாக redeem flights மற்றும் AirAsia BIG mobile app ஊடாக 2018 மார்ச் 4ம் திகதி முதல் (0001h GMT +8) பதிவுகளை மேற்கொள்ள முடியும். AirAsiaGo மற்றும் AirAsia Expedia அங்கத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான விசேட முன்பதிவு link ஒன்று வழங்கப்படும்.

இந்த சலுகைக்காலப்பகுதியில் இணையத்தளம் அல்லது app ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் சகல வாடிக்யௌளர்களுக்கும் தவிர்ந்த ஏனைய ஆசனங்களுக்கு 20% விலைக்கழிவை பெற்றுக் கொள்ள முடியும்.

கோலாலம்பூருக்கு நேரடியாக பயணம் செய்வதற்கு மேலதிகமாக, பயணிகளுக்கு AirAsia வின் Fly-Thru சேவையை பயன்படுத்தி, ஏனைய விமானங்களில் பயணிக்கலாம். தமது பொதிகளை இறுதியாக பயணிக்கும் பகுதிகளில் எவ்வித சிரமங்களுமின்றி பெற்றுக்கொள்ளலாம். AirAsia இனால் இந்தச் வசதி ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 14 நாடுகளில் 41 பயண பகுதிகளில் வழங்கப்படுகின்றது.

Comments