American Express மூலம் iPhone X தொலைபேசிகளை வெல்லும் வாய்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

American Express மூலம் iPhone X தொலைபேசிகளை வெல்லும் வாய்ப்பு

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express முன்னெடுக்கும் Pump Fuel & Win நிகழ்ச்சியில் மாபெரும் பரிசாக புத்தம் புதிய Apple iPhone X, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் இதர அப்பிள் வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை வழங்க முன்வந்துள்ளது.

இந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் பங்கேற்பதற்கு, அட்டைதாரர்கள் 2018 பெப்ரவரி 1ம் திகதியிலிருந்து ஏப்ரல் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியினுள் நாட்டின் எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் 2500 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு எரிபொருள் நிரப்பும் போது தமது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அட்டைகளை பயன்படுத்தி கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தடவை இவ்வாறு எரிபொருள் நிரப்பும் போதும் தமது அட்டைகளை பயன்படுத்துவதனூடாக பரிசை வெல்வதற்கு மேலதிக தகைமை ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும்.

இம்முறை முன்னெடுக்கப்படும் Pump Fuel & Win நிகழ்ச்சி டயலொக் அக்ஸியாடா பிஎல்சி உடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தலா ஒரு வெற்றியாளர் வீதம் தெரிவு செய்யப்பட்டு, புத்தம் புதிய iPhone X ஒன்றை வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட இதர சாதனங்களுடன் பெற்றுக்கொள்வார். வங்கியால் முன்னெடுக்கப்படும் விசேட வெற்றியாளர் தெரிவுகளின் மூலமாக இந்த வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த நிகழ்ச்சி தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் பிரிவின் தலைமை அதிகாரி நிலுக குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “Pump Fuel & Win என்பது நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express இனால் நீண்ட காலமாக முன்னெடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இதனூடாக பல பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எமது அட்டைதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்குவது இதன் பிரதான குறிக்கோளாகும். ஆனாலும் எமது வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்கு அப்பால் சென்று அவர்களை பரவசத்தில் ஆழ்த்த வேண்டும் என்பது எமது மற்றுமொரு எதிர்பார்ப்பாகும்.

எனவே, நாம் மேலதிக வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட சாதனங்களையும் இதில் உள்ளடக்கியுள்ளோம்.

Comments