Medicare 2018 க்கான பிளாட்டினம் அனுசரணையாளர்களாக ஆசிரி குழுமம் | தினகரன் வாரமஞ்சரி

Medicare 2018 க்கான பிளாட்டினம் அனுசரணையாளர்களாக ஆசிரி குழுமம்

இலங்கையின் முதன்மையான சுகாதாரப் பராமரிப்புக் கண்காட்சியான ' Medicare 2018 - சுகாதாரப் பராமரிப்புக் கண்காட்சி' க்கான பிளாட்டினம் அனுசரணையை மீண்டும் ஒருமுறை வழங்குவதன் மூலம், இலங்கையர்களுக்கான சிறந்த சுகாதாப் பராமரிப்பினை வழங்குவதில் தான் காட்டிவரும் அர்ப்பணிப்பினை Asiri Group of Hospitals நிரூபித்துள்ளது. ஒன்பதாவது தடவையாக நடைபெரும் பெருமை மிகு இந்நிகழ்வில் Asiri Group of Hospitals நரம்பியல் பராமரிப்பு பங்காளர்களாகவும் உத்தியோகபூர்வ ஆய்வுகூடப் பங்காளர்களாகவும் இருக்கின்றது. Medicare 2018 ஆனது சுகாதார, போஷணை, மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சினால், விசேட மருத்துவ சங்கத்துடன் இணைந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், 2018 மார்ச் மாதம் 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரையிலும் நடைபெற்றது. யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் மார்ச் மாதம், 9 ஆம் திகதி முதல்,இன்று 11 ஆம்திகதி வரை, காலை 10.00 மணிமுதல் பி.ப 7.00 மணிவரையும் நடைபெறவுள்ளது.

தொடர்ச்சியான இற்றைப்படுத்தல்கள், மற்றும் புனரமைப்புகளைத் தொடர்ந்து, Asiri Group of Hospitals ஆனது, அதனது அதிசிறந்த நவீன உபகரணங்களுக்காகவும், நம்பிக்கையான ஆய்வுகூட வசதிகளுக்காகவும் நாட்டில் பாரியளவிலான அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.

‘MEDICARE 2018’ கண்காட்சியின் போது Asiri Group of Hospitals ஆனது, பல இலவச சேவைகளையும், ஆலோசனைச் சேவைகளையும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளது. ‘MEDICARE 2018’ பற்றிய மேலதிக தகவல்களை இதற்கான உத்தியோகபூர்வ இணையத் தளமான www.medicare.lk. க்கு விஜயம் செய்வதன் மூலமோ அல்லது அதன் சமூகவலைத்தள முகவரியான www.facebook.com/medicare.lk க்கு விஜயம் செய்வதன் மூலமோ பெறலாம்.

Comments