பூஜ்யத்தில் ஆட்டமிழந்த ஜாம்பவான்கள் | தினகரன் வாரமஞ்சரி

பூஜ்யத்தில் ஆட்டமிழந்த ஜாம்பவான்கள்

எம்.எஸ்.எம். ஹில்மி

கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியா- தென்னாபிரிக்காவுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது அதிரடி வீரர் ஏ.பி. டிவிலியர்ஸ் புஜ்ஜியத்துக்கு ‘ரன் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். அவர் டெஸ்ட் போட்டியொன்றில் ரன் அவுட் மூலம் ஓட்டம் பெறாது ஆட்டமிழப்பது இதுவே முதல் தடவையாகும். இவர் தென்னாபிரிக்க அவுஸ்திரேலியத் தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் சில ஊடகங்களில் ஊகங்களாக செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஓட்டம் பெறாத ஆட்டமிழப்பானது டெஸ்ட் போட்டிகளில் அவர் பெறும் 6வது ஓடடம் பெறாத ஆட்டமிழப்பாகும். இவ் ஆட்டமிழப்பானது அவர் மொத்தமாக சர்வதேச போட்டிகளில் பெறும் 29 ஆவது ஓட்டமெதுவும் பெறாத ஆட்டமிழப்பாகும். இது தென்னாபிரிக்க வீரர் ஒருவர் பெற்ற கூடுதலான ‘டக் அவுட்’டாகும். இதற்கு முன் தென்னாபிரிக்காவின் ஓய்வுபெற்ற நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான ஜக் கலிஸ் பெற்ற 28 முறை பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தததே கூடுதலான ஓட்டம் பெறாத ஆட்டமிழப்பாக இருந்தது.

இந்த வகையில் பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அவர்கள் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் கடைசி இன்னிங்ஸில் பூஜ்ஜியத்துக்கு ஆட்டமிழந்துள்ளவர்களில் சில முக்கிய வீரர்களின் விபரம்.

சேர். டொன் பிரட்மன்

டெஸ்ட் போட்டிகளில் கூடிய சராசரியான 99.94 ஐப் பெற்றுள்ள அவுஸ்திரேலிய ஜாம்பவானான டொனல்ட் பிரட்மன் இங்கிலாந்துடன் விளையாடிய தனது கடைசிப் போட்டியின் போது இரண்டாவது இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்ததார்.

இதனால் இவர் ஓர் அரிய சாதனையை தவறவிட்டார். அந்த இனிங்ஸில் அவர் 4 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்திருந்தால் கூட அவரின் டெஸ்ட் போட்டிகளின் சராசரி 100 ஆக இருந்திருக்கும். துரதிருஷ்டவசமாக ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்தார்.

சிவ்நரின் சந்திரபோல்

இவர் மேந்கிந்திய தீவு அணிகளுக்காக அதிகூடிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவராவார். மொத்தமாக 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11.867 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவர் இங்கிலாந்துடன் நடைபெற்ற இவரின் கடைசிப் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் மேற்கிந்திய அணி வெற்றிபெற்றது.

திலகரத்ன டில்ஷான்

இலங்கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான இவர் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5492 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2013ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் நடைபெற்ற இவரின் இறுதி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 57 ஓட்டங்களைப் பெற்றாரும் இவரது கடைசி இனிங்ஸான இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

பிரயன் சார்ன்ஸ் லாரா

டெஸ்ட் போட்டியில் தனி நபர் கூடிய ஓட்டமாக அன்டிகுவாவில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 400 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ள மேற்கிந்தியத் தீவின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பிரயன் லாரா 2006ஆம் ஆண்டு தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானு்ககு எதிராக கராச்சியில் விளையாடினார். முதல் இன்னிஸ்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 49 ஓட்டங்களைப் பெற்றார். இவர் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமானதும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் 199 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

சவ்ரோவ் கங்குலி

முன்னாள் இந்திய அணித் தலைவரான சவ்ரோவ் கங்குலி 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியொன்றில் தனது கடைசி இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணியின் அறிமுகப் பந்து வீச்சாளர் ஜேசன் கிரீச்சாவின் பந்து வீச்சில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார்.

கிரஹம் ஹிக்

சிம்பாப்வேயில் பிறந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடிய கிரஹம் ஹிக் 65 போட்டிகளில் விளையாடி 3383 ஓட்டங்கள் பெற்றுள்ளார். இவர் 2011ஆம் ஆண்டு இலங்கை அணியுடன் கண்டியில் நடைபெற்ற தனது இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். ஆனால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

இம்ரான் கான்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும் தலைவருமான இம்ரான் கான் இவர் 88 போட்டிகளில் 1982 ஓட்டங்கள் பெற்றுள்ளார். 1992ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக பைசலாபாத்தில் நடைபெற்ற தனது கடைசி டெஸ்டில் முதல் இன்னிங்ஸிவ் 22 ஓட்டங்களைப் பெற்றதோடு இரண்டாவதும இன்னிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார். இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெடடுக்களால் வெற்றிபெற்றது.

வினோ மங்காட்

இந்திய அணியின் ஆரம்பத் துடுபப்பாட்ட வீரராக செயற்பட்டு பல சத இணைப்பாட்ட சாதனையைப் புரிந்த வினோ மங்காட் மேற்கிந்தித் தீவுகளுடனான தனது கடைசி இனிங்ஸில் பூச்சியத்துக்கு ஆட்டமிழந்தார்.

 

Comments