ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு | தினகரன் வாரமஞ்சரி

ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு

ஹம்பாந்தோட்டை தினகரன் விசேட நிருபர்

ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எம். எம். எம். ரிஸான் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாநகர பொது விளையாட்டுத் திடலில் 21, 22 ஆம் திகதிகளில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. கிரிக்கெட், எல்லே, வலைப் பந்து, கைப்பந்து, பூப் பந்து மற்றும் மேசைப் பந்து ஆகிய விளையாட்டுக்களோடு சுவட்டு நிகழ்ச்சிகளிலும் எமரல்ட் (பச்சை), ஸபயர் (நீலம்), ரூபி (சிவப்பு) ஆகிய மூன்று இல்லங்களாக மாணவர்கள் போட்டிகளில் உட்சாகமாக பங்குபற்றினர். இறுதியில் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நடப்பு வருட சாம்பியன்களாக ரூபி (சிவப்பு) இல்லம் தெரிவு செய்யப்பட்டது. போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிண்ணங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதல்களும் கலந்து கொண்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

நடைபெற்று முடிந்த இந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் ஹம்பாந்தோட்டை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. எ. ஆர். ஜி, ராஜகருணாவுடன் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பெரும் திரலானோர் கலந்து சிறப்பித்தனர்.

இறுதி நிகழ்வுகளாக இடம் பெற்ற மாணவர்களது உடற் பயிற்சி கண்காட்சி, ஜிம்நாஸ்டிக் மற்றும் அணிநடை வகுப்பு என்பன பார்வையாளர்களை கவரக் கூடிய விதத்தில் அமைந்து காணப்பட்டது.

 

Comments