சமூக வதைத் தளங்களும் நாமும்! | தினகரன் வாரமஞ்சரி

சமூக வதைத் தளங்களும் நாமும்!

நாட்டு நடப்புகளைப் பார்த்தால் இப்பிடித்தான் சொல்லத் தோணுது. கடந்த புதன்கிழமையிலிருந்து இந்த சமூக வதைத்தளங்கள் இயங்கவில்லை. அநேகருக்கு இது பெரிய அதிர்ச்சி! கையும் ஓடலை, காலும் ஓடலை! சாப்பாடும் இல்லை. யார் யார் சாப்பிட்டாங்களோ, சாப்பிடலையோ? எவர் எங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாரோ? எதைப்பற்றியும் தெரிஞ்சுகொள்றதுக்கு வாய்ப்பில்லை. சிலபேர் வீட்டிலை உள்ளவங்களுக்குச் சொல்றாங்களோ இல்லையோ, முகப்புத்தகத்திலை வந்து வணக்கம் சொல்லிட்டுத்தான் போவாங்க. இதிலை தத்துவம் வேற.. மாலையிலை வீட்டுக்கு வந்து நித்திரைக்குப் போறதெண்டாலும், வீட்டாக்களுக்கு இல்லாட்டிலும் முகப்புத்தகத்திற்கு குட்நைற்!

இப்ப முகப்புத்தகம் எல்லாத்துக்கும் குட்பை சொல்லியிருக்குது! அது தற்காலிகமானதுதான். என்றாலும், நம்மில் பெரும்பாலோருக்கு முகப்புத்தகம் இல்லாவிட்டால், பாலைவனத்தில் இருப்பதாகத்தான் உணர்கிறார்கள்!

உண்மையாகவே, முகப்புத்தகமோ, வட்ஸப்போ, வைபரோ வதையல்ல. அதைப்பயன்படுத்துவோர்தான் மற்றவர்களை வதைக்கின்றனர். இந்த முகப்புத்தகத்தையெல்லாம் கொஞ்ச காலத்திற்கு முடக்கிவிட்டால், நாட்டில் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று அதே முகப்புத்தகத்திலேயே அநேகமானோர் கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்கள். கருத்துகளைப் பகிர்ந்த சில மணி நேரத்திலேயே அவை முடக்கப்பட்டதாகத் தகவல்! ஆனால், சில நெட்டிசன்கள், நீ முடக்கிறத முடக்கு, நான் செய்றத செய்றன் எண்டு முகப்புத்தகம் பார்த்ததாகச் சொல்கிறார் நண்பர்.

உதெப்பிடியப்பா?

உதுக்ெகல்லாம் முறைகள் இருக்கு. தலைவலிக்குத் தலையணையை மாற்றின கதை உது! அப்பிடி இல்லாட்டிக்கு, கன்றோட கழுத்திலை சிக்கின பானையை விடுவிக்கிறத்துக்காக, கன்றுக்குட்டியின் தலையை வெட்டும்படி சொன்ன மாதனமுத்தா, பிறகு கொஞ்ச நேரத்திலை பானையை உடைச்சு எடுக்கச் சொன்னமாதிரியல்லவா கதை! ஒண்டு இன்ரநெற்ற டிஸ்கனக்ற் பண்ண வேண்டும்.. இல்லாட்டிக்கு போன் நெற்வேர்க்குகளை முடக்க வேண்டும் என்று அபிப்பிராயம் சொல்கிறார் நண்பர்.

போன் நெற்வேர்க்குகளை முடக்கினால், வாடிக்ைகயாளன் சண்டை பிடிக்கமாட்டானே? என்று நான் கேட்டன். இல்ல, நாட்டு நலனுக்காக என்று சொல்லி விளக்கம் குடுக்கலாந்தானே!. சமூக வலைத்தளங்களைக்ெகாண்டு எவ்வளவோ நிறுவனங்கள் இயங்குகின்றன. அதைவிடவும் இன்ரநெற், டாட்டா கனெக்‌ஷன் எடுக்கிறத்துக்கு ஆரும் போகமாட்டாங்கள். எடுக்கிற சம்பளத்திலை டாட்டாவுக்குத்தான் கூடுதலா செலவுசெய்றாங்கபோல. பஸ்கள்ல பாருங்க அந்த ஹான்ஸ்பிறியைக் காதிலை மாட்டிக்ெகாண்டு, மெய்மறந்து கிடப்பாங்க. பக்கத்திலை என்ன நடக்குது எண்டே அவங்களுக்குத் தெரியாது! ரிக்கற் எடுத்தாங்களா, இல்லையா? என்பதும் நினைவிருக்காது. நடத்துநர் வந்து ரிக்கற் கேட்டாத்தான் சுய நினைவுக்கு வருவாங்க!

நம் நாட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்த அசம்பாவிதங்களைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருக்கிறது.

நல்ல ஒரு நடவடிக்ைகதான் இது. ஏனெனில், பலர் எந்தவித பொறுப்பும் இல்லாமல் தமது கருத்துகளை மனம்போன போக்கில் பதிவிடுகிறார்கள். மத குருமார்களும் இதில் விதிவிலக்கு இல்லை. அண்மையில், தேசிய அடையாள அட்டையில் தமிழ் மொழியும் இடம்பெற்றிருப்பதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து ஒருவர் பதிவிட்டிருந்தார். அதேநேரம், அண்மைய சம்பவத்தைப்பற்றிக் கருத்து தெரிவித்திருந்த மற்றொருவர், வீட்டில் வாள் இருப்பது பலாக்காய் வெட்டுவதற்காக அல்ல என்று குமுறியிருந்தார். அதற்கு எற்றாற்போல் நெட்டிசன் வீரர்களும் தமது வீராவேசத்தைக்கொட்டியிருந்தார்கள்; கொட்டி வருகிறார்கள். அவர்களுக்குக் கொஞ்சமும் சமூக அக்கறையோ, நாட்டின் மீதான பற்றோ இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் சிலர் தங்களுக்குத்தான் அரசியல் விஞ்ஞானம் தெரியும் என்று புலம்புகிறார்கள். போதாக்குறைக்கு அரசியல் தலைவர்களையும் கண்மூடித்தனமாக விமர்சிக்கின்றனர்.

இப்போதெல்லாம், சமூகத்தில் பத்திரிகைகள் பார்க்கிறார்களோ, வானொலி கேட்கிறார்களோ என்னவோ தவறாமல் சமூக வலைத்தளங்களைப் பார்க்கிறார்கள்.

பார்ப்பது சிலர்தான், அந்தக் கருத்தை வைத்துக்ெகாண்டு காதோடு காதாக அவர்கள் பரப்பும் கதைகள், வதந்திகள்தான் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

மனிதனுக்கு முதலில் வளரும் உறுப்பு காது! ஆகவே, காதின் வழியே செல்லும் ஒரு சிறு தகவலும் மிகவும் உணர்வுபூர்வமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் நிபுணர்கள். ஆகவே, செவிவழியாகப் பரவும் கதைகள்தான் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இலத்திரனியல் ஊடகங்களுக்குள்ள பெரும் பலம் இதுதான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டுமாயின் இந்த சமூக வலைத்தளங்களைத் தடை செய்ய வேண்டும் அல்லது சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்பது பொது மக்களின் கருத்தாகவிருக்கிறது.

பெரும்பாலும் வலைத் தளங்களைப் பயன்படுத்தாத மக்கள் இதுவிடயத்தில் கரிசனையோடு இருக்கின்றனர்.

சமூக வலைத் தளங்கள் பயன்பாடு இல்லாத உலக நாடுகள் பலவும் அபிவிருத்தியிலும் அரசியல் பொருளாதாரத்திலும் மிகவும் வலுவான நிலையில் இருக்கின்றன. வடகொரியா, சீனா, ஈரான், கியூபா, பங்களாதேஷ் முதலான நாடுகளை உதாரணமாகக் குறிப்பிட முடியும். இந்தியாவின் காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து சுமார் ஒரு மாத காலத்திற்கு சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதேபோன்று ஜேர்மனி, எகிப்து, சீனா உள்ளிட்ட நாடுகளில் அரசுக்கு எதிரான செயற்பாடுகள் வலைத்தளங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டதையடுத்துத் தடை செய்யப்பட்டன. இவ்வாறு பல்வேறு நாடுகளிலும் நாம் வரலாற்றுப் பதிவுகளைக் காண முடியும்.

இலங்கையில் தற்போது ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டினைப் பாடமாகக் கொண்டேனும் நெட்டிசன்கள் பொறுப்புடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு.

வலைத்தளங்களை வதைத்தளங்களாக மாற்றிவிடாமல் பார்த்துக் ெகாள்ள வேண்டிய பொறுப்பு அதனைப் பயன்படுத்துகின்றவர்களுக்கு உரியதே அன்றி அரசுக்ேகா அல்லது அந்த வலைத்தளங்களின் நிறுவனங்களுக்ேகா அல்ல.

Comments