உஷ்ண நிலை அதிகரிப்பு அதிகளவு நீர் அருந்துவது அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

உஷ்ண நிலை அதிகரிப்பு அதிகளவு நீர் அருந்துவது அவசியம்

அதிக உஷ்ணமான கால நிலை நிலவுவதால் பக்கவிளைவுகளை தவிர்த்துக் கொள்வதற்காக அதிகளவு நீரை அருந்துமாறு ஜயவர்தனபுர ஆஸ்பத்திரியின் மருத்துவ நிபுணர் ஜே.வி.சீ. ஜானக்க தெரிவித்துள்ளார். தினமும் ஒருவர் 2.5 முதல் 3லீட்டர் தண்ணீரை அருந்த வேண்டும் என்பதுடன் வெய்யிலில் நிற்பதை முடியுமான வரை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வெய்யிலில் வேலை செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிகளவு நீர் அருந்த வேண்டும். அதிகளவு வெய்யிலின் தாக்கம் அதிகரிக்கும் நிலை எதிர்வரும் தினங்களில் ஏற்படும் என்பதுடன் மரதன் ஓட்டப் போட்டிகள் மற்றும் ஏனைய விளையாட்டு போட்டிகளை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘sun strokes’ போன்ற விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு உஷ்ண நிலை காரணமாக உடம்பில் பல்வேறு விளைவுகள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளை தினம் ஒன்றுக்கு இரண்டு தடவையாவது குளிர்ந்த நீரில் குளிப்பாட்டுவதுடன் இயன்றளவு அவர்களை நீரில் வைத்திருப்பது நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

Comments