சிறப்பு | தினகரன் வாரமஞ்சரி

சிறப்பு

கலாபூஷணம் ஏ.ஸீ. அப்துல்றகுமான்

மழலைக்குப் பாலூட்டல்

தாய்மையின் சிறப்பு

மழைகண்டு பயிர் செய்தல்

மண்ணுக்குச் சிறப்பு

குலைதள்ளி உயிரீதல்

வாழைக்குச் சிறப்பு

குலமங்கை நாற்குணமும்

பெண்மைக்குச் சிறப்பு

கருத்தோடு இசைகூட்டல்

கவிதைக்குச் சிறப்பு

கலைக்கென்றும் உயிரூட்டல்

கலைஞர்க்குச் சிறப்பு

குடிமக்கள் நலம்பேணல்

கோனுக்குச் சிறப்பு

குறைவிலாதன் புறுதல்

குடும்பத்தின் சிறப்பு

இனிய குரலோசையினால்

குயிலுக்குச் சிறப்பு

இரப்போர்க்கு ஈதலொன்றை

செல்வத்தின் சிறப்பு

கடலாடும் அலையதனால்

கரைக்கென்றும் சிறப்பு

கதிர் வீசி ஒளியூட்டல்

கதிரவனின் சிறப்பு

நல்லவற்றை உரைத்திடவே

நாவுக்குச்சிறப்பு

நல்லவற்றைப் பார்த்திடலே

கண்ணுக்குச் சிறப்பு

கள்ளமில்லா நன்நெறியே

உண்மைக்குச் சிறப்பு

கதிர்குலுங்கும் காட்சியதே

களனிக்குச் சிறப்பு

கற்றது போல் வாழ்வதுவே

கற்றார்க்குச் சிறப்பு

கல்லாமை போக்குவதே

கல்விக்குச் சிறப்பு

Comments