ஆதன கொடுக்கல் வாங்கல்கள் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் Lamudi | தினகரன் வாரமஞ்சரி

ஆதன கொடுக்கல் வாங்கல்கள் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைக்கும் Lamudi

ஆதன கொடுக்கல் வாங்கல் துறை, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் துரிதமாக வளர்ச்சிகண்டு வருகிறது. தலைநகரான கொழும்பின் வான் பரப்பு வரை உயர்ந்து செல்லும் கட்டடத் தொகுதிகள், சொகுசு குடியிருப்பு மாடி மனைகள், ஹோட்டல்கள், உயர்மட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் குழும நிறுவன கட்டடங்கள் என்பன, ஆதனக் கொடுக்கல் வாங்கல்களின் பெறுமதியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன. அதேவேளை, வீட்டு மாடி மனைகள், குடியிருப்புத் தொகுதிகள், அலுவலக இடவசதிகள் என்பன சிறிய மற்றும் நடுத்தர துறைகளுக்கு, தலைநகரில் அதியுயர் இடவசதிகளைப் பெற்றுக்கொடுக்கிறது.

இந்த, ஆதன கொடுக்கல் வாங்கல்கள், கொழும்பு நகரில் மாத்திரமன்றி, மேல் மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்கள் உட்பட, நாட்டின் ஏனைய பகுதிகளான மத்திய, சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் பெருமளவில் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு வளர்ச்சியடைந்து வரும் ஆதன கொடுக்கல் வாங்கல் துறையில் முன்னணி இணைய தள சேவை வழங்குநரான Lamudi அதன் ஆதன கொடுக்கல் வாங்கல் கருத்தரங்கு “Re-Connect: Property 360” இனை கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் அண்மையில் நடத்தியது. இந்த நிகழ்வுக்கு பல்வேறு முன்னணி ஆதன கொடுக்கல் வாங்கல் நிறுவனங்களும் அனுசரணை வழங்கியிருந்தன. இதில் ACQUEST பிளட்டினம் அனுசரணையாளராகவும், Excelsior Residencies மற்றும் CAPITOL TWINPEAKS கோலட் அனுசரணையாளர்களாகவும் Aura Residencies, Dusit Thani மற்றும் SUPERLATIVE Properties என்பன சில்வர் அனுசரணையாளர்களாகவும் பங்குபற்றி அனுசரணை வழங்கினர். உத்தியோகபூர்வ வங்கி பங்காளியாக HNB கலந்து கொண்டது. ஒக்ஸ்பேர்ட் வர்த்தகக் குழுமம் ஆய்வுப் பங்காளியாகவும், RIU உத்தியோகபூர்வ ஆலோசனைப் பங்காளியாகவும் கலந்து கொண்டன. மேலும் நிகழ்வின் உத்தியோகபூர்வ விளம்பரப் பங்காளியாக Storm Media இணைந்து கொண்டது.

இலங்கையின் ஆதன கொடுக்கல் வாங்கல் துறையில் முன்னணி நிறுவனமான Lamudi.lkUDA) தலைவர் டொக்டர் ஜகத் முனசிங்க கலந்து கொண்டார். அத்துடன் ஆதன அபிவிருத்தி துறையில் முன்னோடிகளான Capitol Towers, Dusit Thani, Aura Residence, Excelsior Residencies, Acquest மற்றும் Superlative Properties என்பனவும் இணைந்து கொண்டன.

 

Comments