ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் | தினகரன் வாரமஞ்சரி

ஆரோக்கிய வாழ்வின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ்

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பல்வேறு விருதுகளை வென்று நாட்டில் மருத்துவத் தொழிற்துறையில் முன்னணி வகிக்கும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், அண்மையில் சர்வதேச மகளிர் தினத்தைக் லங்கா ஹொஸ்பிட்டலில் கொண்டாடியது.

வைத்தியசாலையின் பெண்கள் நலன் மையத்தால் (Women’s Wellness Centre) ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் முன்னணி பெண் தொழில் முயற்சியாளர்கள், தொழில்சார் பிரபலங்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

வைத்தியர் நயோமல் பெரேரா (புற்றுநோய் வைத்திய நிபுணர்), வைத்தியர் சமந்தி பிரேமரத்ன (பெண்ணோயியல் வைத்திய நிபுணர்), மற்றும் வைத்தியர் சதிஷ் விஜேமான்ன (அழகுபடுத்தல் சத்திரசிகிச்சை நிபுணர்) ஆகியோர் சிறப்பு விரிவுரைகளை ஆற்றியதுடன், நலன் மற்றும் தன்னறிவு தொடர்பில் பல்வேறு விடயங்களையும் தெளிவுபடுத்தியதுடன், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு நுகர்வு ஆகியவற்றின் விளைவுகள் தொடர்பில் வலியுறுத்திய அதேசமயம், பெண்கள் மத்தியில் நலனை நிலையாக பேணுவதால் கிட்டும் நன்மைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

யுவதிகளுக்கும், பெண்களுக்கும் முழுமையான சுகாதாரப் பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதற்கு அணுசரனையளிக்கும் வகையில், அவர்களுக்கென பிரத்தியேகமான சேவைகளை வழங்கும் நோக்குடன் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வைத்தியசாலை இந்த Women’s Wellness Centre (WWC) இனை ஸ்தாபித்துள்ளது. சர்வதேச தர நடைமுறைகளுக்கு அமைவாக, அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த மையத்தில் நோயை இனங்காணுதல், வைத்திய ஆலோசனைகள், வைத்திய சிகிச்சைகள், சத்திர சிகிச்சைக்குப் பின்னரான மருத்துவ சோதனைகள் மற்றும் ஏனைய பல்வேறு சேவைகளும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கப்பெறுகின்றன.

அனைத்து பெண் நோயாளர்களினதும் (பருவமடைதல் முதல் அதற்கும் பின்னரான) அந்தரங்கத்தை அதியுச்ச மட்டத்தில் பேணி ஓரே இடத்திலேயே அனைத்து சுகாதாரப் பராமரிப்பு சேவைகளையும் வழங்கும் வகையில் அமைந்துள்ள Women’s Wellness Centre மையமானது, கதிர்வீச்சை பெருமளவில் குறைத்து, நோயாளர்களின் அசெளகரியத்தைப் போக்கின்ற டிஜிட்டல் Mammography முறைமையான Fujifilm Amulet Innovality போன்ற அதிநவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது.

Comments