டெஸ்டில் அதிக பந்துகள் வீசி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை | தினகரன் வாரமஞ்சரி

டெஸ்டில் அதிக பந்துகள் வீசி ஜேம்ஸ் அண்டர்சன் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பந்துகளை வீசி ஜேம்ஸ் அண்டர்சன் உலக சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இவர் தற்போது, டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 

இதற்கு முன் மேற்கிந்திய அணியின் கொர்ட்னி வோல்ஷ் 30,019 பந்துகள் வீசி சாதனை படைத்திருந்தார். வோல்ஷ் கிரிக்கெட்டில் 519 விக்கெட்டுக்ளக் வீழ்த்தியுள்ளார். அண்டர்சன் நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் 50 ஓவர்கள் வீசினார். இதன்மூலம் 30,074 பந்துகள் வீசி வால்ஷ் சாதனையை முறியடித்துள்ளார். அண்டர்சன் 136 டெஸ்டில் 531 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக முத்தையா முரளீதரன் அதிக பந்துகள் வீசி முதல் இடத்தில் உள்ளார். இவர் 44039 பந்துகள் வீசி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Comments