அதிமிக கொடியது | தினகரன் வாரமஞ்சரி

அதிமிக கொடியது

நீ.பி. அருளானந்தம்

பசியில்

வருந்தும்

குழந்தைக்கு

பசிபசி

என்று சொல்ல

முடியவில்லை!

ஆனால் அழுகையாக

சொல்லிச் சொல்லிப்

பார்க்கிறது!

வெறும் வயிற்று

நோ ஒன்றாலும்

தாயின் கண்கள்

பிள்ளைக்காக

அஞ்சிறது!

கண்ணையே கசச்சி

குடைந்து பகீரதங்கள்

அவள் எடுத்தும்

பால் சுரக்கா

மார்புகளுடன்

பூமித்தாயையும்

அவள் சபிக்கிறாள்!

குழந்தையின்

வாய்க்குள்

வேகம் ஏறிட

பிள்ளை தனக்குக்

கொடுத்த வலி

உறுத்தல்

அவளுக்கு

ஏனென்னு

தெரியாதா

என்ன?

Comments