தமிழ் மகளே சித்திரையே! | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மகளே சித்திரையே!

கலாபூஷணம் கீழ்கரவை கி.குலசேகரன், அப்புத்தளை

பங்குனி வயிற்றினில் பிறந்தவளே! இப்

பார் புகழ்ந்தோட வந்தவளே!

தங்க நிலவாயைத் தவழ்பவளே!- எம்

தமிர் மகளே சித்திரையே!

வசந்த காலம் வரவேற்க- உனை

வாழ்த்திக் குயல்கள் தாமிசைக்க

அசைந்து அழகாய் நீயும் வர- அன்பாய்

அள்ளி அனைத்தே நாம் மகிழ-

துன்பமெல்லாம் தொலைந்தோட- நீ

துணையாய் வந்தே வழிகாட்ட

அன்பும், அறமும் நிலைத்தோங்க- இங்கு

அச்சம்,மடமை, பகை நீங்க...

Comments