நினைவு கூரும் | தினகரன் வாரமஞ்சரி

நினைவு கூரும்

இராணி பெளசியா- கல்லளை

ஒரு புன்னகையில்

நூறு புதிர்கள் மறைந்திருக்கும்

அவளின்

ஒரு சிரிப்பொரியோ

ஆயிரம் கதைகள் தாங்கிக் நிற்கும்

என்றுமே

புரியாத புதிராக அவளும்

என்றென்றும்

எழதப்படாத கதையாக

அவள் வாழ்வும்

அனைவருக்கும் பெய்யும

மழையாக

ஆண்டொன்றில்

இவளும் நினைவு கூரப்படுவாள்

Comments