புலர்க புத்தாண்டே! | தினகரன் வாரமஞ்சரி

புலர்க புத்தாண்டே!

கிண்ணியா லத்தீப் ஏ. றஹீம்

புல்லர்கள்- புதைகுழிக்குள் புகுந்திடவே- – புதுமைகள்

பூத்துக்குலுங்க வரும் புத்தாண்டே!

கள்வர்கள் கயமைகள் கழிந்திடவே –கவின்கலை

காணவரும் புத்தாண்டே

உள்ளங்கள் உவகையுறவே வரும்- – உயர்ந்த

உண்மைகள் தேங்க வரும் புத்தாண்டே

இல்லங்கள் தோறும் ஒளி ஓங்கிடவே- – உன்வரவை

எதிர்கொண்டோம் வருக புத்தாண்டே!

ஏழைகள் வாழ்வு வளம் பெற்றிடவே- – ஏகனின்

அருளைக் கொணர்ந்து வரும் புத்தாண்டே!

கோழைகளாய் வாழும் மக்களெல்லாம்- – வீறு கொண்டு

எழுந்திடவே வரும் புத்தாண்டே!

சோலை வனமாய் நாடு நலம் பெற்றிடவே – சோபை

ஜொலித்திடவே வரும் புத்தாண்டே!

மூலை முடுக்கெல்லாம் உன்வரவை –- மக்கள்

எதிர்பார்த்திருக்கின்றார் எழுக புத்தாண்டே!

சாதிக்கொடுமையினை ஒழித்தோங்கிடவே- – தூய

சாத்வீகம் கொணர்ந்து வரும் புத்தாண்டே!

மோதித் தலையுடைக்கும் மாந்தர் மாய்ந்திடவே- – உயர்

மோன நிலை காணவரும் புத்தாண்டே!

பாதியாய் மனிதன் வாழ்ந்து மடியாது- – முழுமதியாய்

பரிமளிக்க வரப்போகும் புத்தாண்டே!

நாதியின்றித் தெருவில் நிற்கின்ற மக்களோ- – உன் வரவை

நாடியே நிற்கின்றார். புலர்க புத்தாண்டே!

Comments