மாண்பு தரும் மகிழ்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

மாண்பு தரும் மகிழ்ச்சி

சின்னம் பிள்ளைச்சேனை சிறஹாப்தீன்

குழந்தை உள்ளங்களில்

குதுகலத்துடன் கூடிக்களிப்பது

குடும்பத்திற்கு மாண்பு தரும் மகிழ்ச்சி.

குடும்பமே குதுகலம்

இதன் உண்மையை அறியா பெற்றோர்

இழக்கும் மன அமைதியை

இறக்கும் வரையில் தேடி

இறந்தே விடுகின்றனர்

சில உள்ளங்கள் ஏனோ

சின்னஞ்சிறுசுகளை விட்டு

சிறப்பு சுகம் தேடுகிறது

சிதைகின்றது அந்த உதிரிப்பூக்கள்

பெற்றமனம் பல, தான்

பெற்ற பிள்ளையை பத்து வயதில்

பெற்றாருக்கு பிள்ளை பற்றி கவலை

பெற்ற மனம் பித்து,

தாய்க்கு பிள்ளை பற்றி கவலை

தந்தைக்கு மனதுக்கு வருத்தம்

தரும சங்கடம் இருவருக்கும்

தற்றுணிவு தானாகவே தாவுகிறது

பிள்ளையின் வளர்ப்பில் புதிய ஞானம்,

பிடிவாத ஆயுதத்தை கடிவாளமாக்கி

பிள்ளை கட்டுப்பாடுக் கூண்டில்

பிரயோசனமில்லா வளர்ப்பு

அன்பு, பாசம், கருணை எனும்

அரவணைப்பில் அடி நாளையில்

அள்ளி அள்ளி கொடுத்தல் நன்று

அகிலமும் அரவணைக்கும்

குழந்தைகள் வளர்க்கக் கூடாது

குழந்தைகள் வளர்த்தல் வேண்டும்

குழந்தைகளும் குணசிலர்கள்

குடும்பமும் கோயிலாகும்.

Comments