வியாபாரமாகியுள்ளதா நுண்கடன் திட்டம்? | தினகரன் வாரமஞ்சரி

வியாபாரமாகியுள்ளதா நுண்கடன் திட்டம்?

 நுண்கடன் திட்டம் என்றால் என்ன?

நுண்கடன் என்றால் சிறிய அளவான கடனாகும். கிராம மட்டத்தில் வங்கியில் கடன் பெறமுடியாதவர்களின் நன்மை கருதி நுண்கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கடன் கொடுக்கப்படுவது அவரவர்களின் வாழ்வாதாரத்தைக் கட்டி எழுப்புவதற்காகும். அதாவது அவர்களின் உற்பத்தி, கைத்தொழிலை மேம்படுத்துவதற்காகும். இந்த கடன் திட்டத்தினூடாக சிறிய அளவு கடன்களை வழங்கினாலும் இன்று வங்கிகள் கூட நுண்கடனூடாக பல இலட்சங்களை வழங்குகின்றன. இந்த கடனூடாக அவர்கள் திரட்டும் வருமானத்திலிருந்து ஒரு பகுதியை செலுத்தும் முறையாகும். உதாரணமாக ஒரு இலட்சம் ரூபா கடன் பெற்று அதனூடாக பத்தாயிரம் ரூபா வருமானம் கிடைத்தால் நான்காயிரம் ரூபாவை மீள்செலுத்தலாம்.

இந்நுண்நிதி கடன் நடைமுறை இலங்கையில் 40 வருடங்களுக்கு மேலாக இருந்தாலும், சுனாமி தாக்கத்தின் பின்னரே பிரபல்யம் அடைந்தது. இக்காலத்திற்கு பின்பு அநேக நிறுவனங்கள் நுண்கடன் வழங்க ஆரம்பிக்கப்பட்ட பின் இக்கடன் வழங்கும் திசை மாறிச் சென்றுவிட்டது. சில நிறுவனங்கள் வருமானத்தை முன்நிறுத்தி இக்கடனை வழங்குகின்றன. அத்துடன் இக்கடன் திட்டம் வாழ்வாதாரத்திற்கு மட்டுமன்றி வீட்டுத்திட்டம் உட்பட வேறு தேவைகளுக்கும் வழங்கப்படுகின்றது.

அப்படி வழங்கும் போது அவர்கள் மீண்டும் அக்கடனை எப்படி செலுத்துவர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவர் கடன் வாங்கும் போது அன்றாம் அவருக்கு வருமானம் இல்லை என்றால் அப்போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன.

 இதற்கான நிதி எங்கேயிருந்து கிடைக்கப் பெறுகிறது?

இதற்கான நிதி நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப் பெறுகிறது. ஆனால் வர்த்தக வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாடிக்ைகயாளர்களிடமிருந்து நிதியினை பெற்று, அந்நிதியையே கடனாக பயனாளிகளுக்குக் கொடுக்கிறது. அதிகமான அரச சார்பற்ற நிறுவனங்கள் நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிதியினையே வழங்குகின்றன. ஏனென்றால் அரச சார்பற்ற நிறுவனங்களில் பொதுமக்கள் வைப்பீடு செய்ய முடியாது. அதேபோன்று இந்நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் வங்கிகளிடமிருந்து நிதியினை கடனாகப் பெற்று அதனை மீண்டும் மேலதிக வட்டியுடன் பயனாளர்களுக்கு வழங்கலாம்.

 சமுதாயத்தில் எந்தப் பிரிவினருக்கு இக்கடன் வழங்கப்படுகின்றது?

ஆரம்பத்தில் கூறியது போல், வங்கியில் கடன் பெறச் சென்றால் அதிகளவான ஆவணங்கள் மற்றும் பிணையாளர்களை சமர்ப்பிக்க வேண்டும். இக்கடன் திட்டத்தின் மூலம் அப்படியானவர்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படுவதில்லை. இக்கடன் திட்டம் குழு என்ற ரீதியிலேயே செயற்படுகின்றது. அதாவது ஒரு கிராமத்தில் சிலர் ஒன்றிணைந்து குழுவாக செயற்படும் போது, அவர்களுக்குள்ளேயே நம்பிக்ைக என்ற ரீதியில் உத்தரவாதமளித்தலாகும். அக்குழுக்குள்ளேயே ஒரு சேமிப்பும் உருவாகும். எக்ேளாப் லங்கா ஆகிய நாங்கள் சேமிப்பு பணத்தைப் பெறுவதில்லை.

வருமானத்தை மீட்கும் வாழ்வாதார திட்டத்தினூடாக கடன் பெறலாம். உதாரணமாக கோழி வளர்ப்பு என்ற ரீதியில் முதலாவது முப்பதாயிரம் ரூபாவும், இரண்டாவது தவணையில் ஐம்பதாயிரம் ரூபாவையும் வழங்குவோம். இப்படியாக படிபடியாக அதிகரித்து கொண்டே போய் ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் வரையும் செல்லாம்.

 கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருப்பவரிடம் இருந்து அறவிடும் வழி என்ன?

இன்றைய சூழ்நிலையில் நுண்கடனை எல்லாவிடத்திலிருந்தும் பயனாளிகள் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் வங்கியில் கடனைப் பெற்று அதனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால் அவரின் பெயரை கறுப்பு (அபகீர்த்தி) பட்டியலில் போட்டு விடுவார்கள். அதன் பின்னர் எந்த வங்கியிலும் கடன் பெறமுடியாது. ஆனால் நுண்கடன் பெற்று திரும்பி செலுத்தாதவர்களை கறுப்பு பட்டியலிட முடியாது. இதனால் அவர்கள் பல்வேறு நுண்கடன் நிறுவனங்களிடமிருந்தும் கடனைப் பெறுகின்றனர். நுண்கடன் வழங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அரச அங்கீகாரத்துடன் செயற்பட்டாலும் மத்திய வங்கியின் கீழ் செயற்படாமையினால் இதில் கடன் பெற்றவர்கள் குறித்து பட்டியலிடப்படாமையும் குறிப்பிட வேண்டும். சிலர் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிதொரு இடத்தில் கடன் வாங்குகின்றனர். இப்படியாக கடனை அதிகரித்து திண்டாட்டத்திற்குள் வருவதுடன் கடன் கொடுத்த முகவர்கள் பலவந்தமாக கடனை மீளப்பெறும் வழிவகைகளைக் கையாளுகின்றனர். இப்படியான பிரச்சினைகள் இங்குமட்டுமல்ல உலக ரீதியாக நடைபெறுகின்றது. இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் இதே நிலையே காணப்படுகின்றது. நாம் கடனை அன்றைய தினமே follow up என்ற ரீதியில் கடனை மீளப்பெறுகிறோம்.

கடனைக் கட்டாதவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினால் அக்கடிதத்தைக் கிழித்து எறிந்துவிடலாம். கடன் பெற்றவர்களும் ஒரு மனிதர் என்ற ரீதியில் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுடன் கதைத்து கடனை மீளஅளவிடுகிறோம். அதற்காக வீட்டு வாசலிலிருந்து கத்த முடியாது. சிலர் கூறலாம் நாம் திரும்பிச் செலுத்த மாட்டோம் என்று. அப்படியானவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்ய முடியாது. சிவில் வழங்கு போட வேண்டிய நிலை உருவாகும். சட்டரீதியான நடவடிக்ைகயே எடுக்க வேண்டி வரும். மோசடி என்றால் மட்டுமே பொலிஸுக்குப் போகலாம்.

எமது நிறுவனத்தினால் follow up செய்வதினால் கடன் பெற்றவர் குடும்பத்தில் ஒரு மரணம் அல்லது புற்றுநோய் போன்ற பாதகமான சூழல் காணப்படுமானால், அவர்கள் கிராம உத்தியோகத்தர் மூலமாக ஒரு மனுவினை சமர்ப்பித்து, மரண சான்றிதழ் அல்லது நோய்க்கான வைத்திய சான்றிதழை சமர்ப்பித்தல் அந்தக் கடனை அறவிட முடியாத கடனாக இயக்குநர் குழுவின் அனுமதியுடன் செயற்படுத்துவோம். ஆனால், சில நிறுவனங்கள் எந்த சூழ்நிலை உருவாகினாலும் கடனை அறவிடுவதிலேயே கண்ணாயிருப்பார்கள். ஆனால் எமது எக்ேளாப் லங்கா அப்படியல்ல. அதிகமான நிறுவனங்கள் நுண்கடன் கொடுப்பதில் முண்டியடித்துக் கொண்டு செயற்பாடுவதாலேயே இந்நிலை உருவாகியுள்ளது.

 சில இடங்களில் பலவந்தமாக கடனை அறவிடுகின்றனர் ஏன்?

அதிகமான கடனை அறவிட செல்லும் உத்தியோகத்தர்களுக்கு அடிப்படை சம்பளம் குறைவாக இருந்தாலும் கடனை அறவிடுவதில் அவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படுவதினாலும் அவர்கள் அந்த கடனை அறவிடுவதில் முனைப்பு காட்டலாம். அந்தக் கடன் தவணையைத் திருப்பி செலுத்தாவிட்டால் அந்த உத்தியோகத்தரின் கொடுப்பனவு குறைவடைவதினால் அவர் சில வழிமுறைகளைக் கையாண்டு கடனை திரும்ப பெறமுயலாம். இதற்குக் காரணம் கடன் செலுத்தாதவர்கள் பெயர் கறுப்பு பட்டியலில் இடப்பட்டால் இந்நிலையை சீரமைக்கலாம்.

புதிய சட்ட பிரிவின்படி சில நிறுவனங்கள் மத்திய வங்கியின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன. சில நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களாகவே இயங்குகின்றன. எமது எக்ேளாப் நிறுவனம் அரச சார்பற்ற நிறுவனமாகவே இயங்குகின்றது. மத்திய வங்கியின் கீழ் உள்வாங்கப்பட்ட நிறுவனங்கள் வாடிக்ைகயாளர்களின் நிதியினை முதலீடாக உள்வாங்கலாம் என்ற சலுகையுண்டு. இந்தக் கறுப்புப் பட்டியல் இடல் பொதுமைப்படுத்தப்படுமானால் கடன் எடுத்துக் கடன் திரும்பிச் செலுத்தாமல் போனவர்கள் பிரிதொரு இடத்திலிருந்து கடன் வாங்க முடியாது. புதிய சட்ட ஒழுங்கின்படி எதிர்காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்த முறையினை உருவாக்கும். யாருமே நூறு வீதம் செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அதிகமான நுண்கடன் நிறுவனங்கள் இலாபத்தை நோக்காகக் கொண்டே செயற்படுவதாலேயே இந்நிலைமை உருவாகியுள்ளது. கடன் வாங்கிய நோக்கத்திற்கு மட்டுமே நிதியினை பயன்படுத்தினால் இப்படியான நிலை உருவாகாது.

 கடன் திரும்பிச் செலுத்த முடியாததால் சிலர் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

நூற்றுக்கு தொண்ணூறு வீதம் கடன் பெறுவது பெண்களாவர். குழு ரீதியாக ஒன்று கூடி வருவதும் பெண்களாவர். மாதாந்தத்திற்கு ஒரு முறை குழு கூடும் அல்லது சங்கக் கூட்டம் நடைபெறும். இந்நிலை இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. அதிகமான உத்தியோகத்தர்கள் இளம் ஆண்களாவர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வீடுகளுக்கு அல்லது இக்குழு கூடும் இடத்திற்குச் சென்று பணத்தை மீள் அளவிடுவர். எமது நிறுவனம் ஐம்பது வீதம் பெண் உத்தியோகத்தர்களையும் பயன்படுத்துகின்றது.

அத்துடன், சில இடங்களில் பிரச்சினைகள் வருவதற்கு மேலுமொரு காரணம் பெண்கள் கடன் வாங்குவார்கள்.

சில நுண்கடன் நிறுவனங்கள் பணத்தையும், வட்டியையும் நோக்காகக் கொண்டுள்ளதால் பிரச்சினை எழுகின்றது. வாழ்வாதாரத்தை மீட்டுக்ெகாண்டு செயற்பட கூடியவர்களை வங்கிகளுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும். இதுவே நுண்கடன் திட்டத்தின் சரியான செயற்பாடாகும்.

கடன் பெற்றோர் இதிலிருந்து மீள் எழுவது எப்படி?

நிறைய நிறுவனத்திலிருந்து கடன் பெற்றிருந்தால் அவர்கள் கடன் பிரச்சினையிலிருந்து வெளியே வருவது கடினமான காரியாகும். எக்ேளாப் நிறுவனத்தில் அவர்கள் கடன் பெற்று மீள செலுத்த முடியாமல் போனதற்கு சரியாக காரணம் அதாவது மரணம், கடுமையான நோய் தாக்கம், வெள்ளம், யானைகளினால் பயிர் அழிவு போன்ற காரணங்களுக்கு கிராம உத்தியோகத்தர் மூலமான சரியான அறிக்ைக சமர்ப்பிக்கப்படுமானால் அக்கடனை அறவிடமுடியாத கடன் பட்டியலில் இணைத்து விடுவோம்.

ஆனால் வியாபாரம் ஆரம்பித்து அதில் நஷ்டம் ஏற்பட்டால் அக்கடன் காலத்தைப் பின்போடுவோம். ஆனால் ஒரு நிறுவனத்தில் கடன் பெற்றிருந்தால் இந்தச் சலுகையை அவர்கள் பெறலாம். பல நிறுவனத்தில் இப்படியான கடன் இருக்குமானால் அவர்களின் நிலை வேதனைக்குரியதாகும்.ஆனாலும் வேறு நிறுவனங்கள் இப்படியான நிலையினை எப்படி கையாளுகின்றன என்பது கேள்விக்குரியது. எமது நிறுவனத்தினால் வழங்கப்படும் நுண்கடனுக்குரிய வட்டி 16 வீதமாகும். இது நுண்கடனில் குறைந்த வட்டிவீதமாகும். வாழ்வதாரத்தை சரியாக பயன்படுத்தினால் அவர்கள் தங்களது முயற்சியிலிருந்து முன்னேற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

எக்ேகாளப் லங்கா நிறுவனத்தின்...?

தலைமையகம் ஜெனீவாவில் உள்ளது. இலங்கையில் ஏழுபேர் கொண்ட ஆளுநர் சபை உள்ளது. நன்கொடையாளர்களின் நிதியூடாகவே நுண்கடன் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

எக்ேளாப் நிறுவனம் இலங்கையில் 42 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு மன்னார், கிளிநொச்சி உட்பட எட்டு மாவட்டங்களில் தனது பணியினை முன்னெடுத்து வருகின்றது. எமக்கு சுமார் 16 ஆயிரம் பயனார்கள் உள்ளனர்.

நாம் சுமார் 300 மில்லியன் ரூபாவை கடனாக கொடுத்துள்ளோம். வட்டி வீதம் 16 வீதமாகும். கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் ஒரு வருடம் அல்லது 24 மாதகாலமாகும்.

எமது நிறுவனத்தின் மூலமாக முதல் கடன் 40 ஆயிரத்திலிருந்து ஆரம்பித்து படிபடியாக அதிகரித்து ஒரு இலட்சத்து எழுபத்தையாயிரம் வரை கடன் கொடுக்கப்படுகிறது.

முதல் சுற்றில் ஒழுங்காக செலுத்தினால் அவர்களுக்கு மேலும் சில சுற்றுவரை செல்லலாம். வாழ்வாதாரத்தை சீராக அமைத்து முன்னேறியவர்கள் அதிகமான பணத்தை வங்கியிலிருந்து பெறுவதற்கு ஊக்குவிக்கப்படுவர். எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு சீராக கடனை செலுத்தியவர்களுக்கு நாம் தனிப்பட்ட கடனாக மூன்று இலட்சம் கொடுக்கிறோம். எமது ஒரே குறிக்கோள் வங்கிகக்கு போகமுடியாதர்வளுக்கு நாம் கடன் வழங்குவதாகும். பயனாளர்கள் குழு நிலையில் செயற்படுவதிலேயே ஊக்குவிக்கப்படுகின்றனர். இது வியாபாரமல்ல வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகும்.

Comments