காதலும் கற்று மற! | தினகரன் வாரமஞ்சரி

காதலும் கற்று மற!

சில வருடங்களுக்கு முன்பு பிரபுதேவாவும் நயன்தாராவும் காதலித்தனர். இருவரும் நெருங்கி பழகினார்கள். திருமணத்துக்கும் தயாரானார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். ஆனால் அந்த காதல் சில நாட்களில் முறிந்துவிட்டது. தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகிறார்கள். விரைவில் இருவரும் திருமணம் செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில், மீண்டும் பிரபுதேவாவுடன் நயன்தாரா இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபுதேவா இயக்க இருக்கும் புதிய படத்தில் அஜித் கதாநாயகனாகவும், நயன்தாரா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

காதலராக இருந்து பிரிந்த பிரபுதேவாவும் நயன்தாராவும் எப்படி இணைவார்கள் என்று அனைவரி டையே கேள்வி எழும் நிலையில், தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு, சிம்புவுடனான காதல் முறிந்த பிறகும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா நடித்தார். அதுபோல் இதிலும் நடிப்பார் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் ஒரு பேட்டியில் நயன்தாரா “காதல் கட்டாயம் பன்னணும் அதே மாதிரி அது சரியா வரலைன்னா அதை மறக்கவும் தெரிஞ்சிருக்கனும்” என்றார். அதனால் பிரபு தேவாவின் படத்தில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் அவருக்கில்லை. ஆனால் நயன்தாராவின் வருங்கால கணவர் விக்ணேஷ் சிவன் சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

Comments