சன்னிலியோனை நமது நடிகைகள் பின்பற்றுவார்களா? | தினகரன் வாரமஞ்சரி

சன்னிலியோனை நமது நடிகைகள் பின்பற்றுவார்களா?

சமீபத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயாகியுள்ளது நீங்கள் அறிந்ததுதான்.

பொலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது அவரது கணவர் டேனியல் வெபருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏற்கெனவே மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூரில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதையடுத்து, தங்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் சமீபத்தில் அறிவித்திருக்கிறாா்கள். குழந்தைகளுக்கு நோவா சிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என பெயர் சூட்டியுள்ளதாவும் கூறியுள்ளனர்.

சன்னிலியோனுக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் ஒரு வாடகை தாயின் மூலமாக பிறந்ததாம்.

நடிகைகள் என்றும் இளமையாக இருக்கனும்னா சன்னி மாதிரி வாடகை தாயின் மூலமாக குழந்தை பிறந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லைன்னு ஒரு சமூக வலைத்த தளத்தில் யாரோ ஒரு பதிவை போட, அதையே நமது தமிழ் திரையுலக நடிகைகளும் பின்பற்றலாம் என்று யோசிக்கிறார்களாம், திரிஷா, நயன்தாரா, கீர்த்தின்னு எல்லோரும் சன்னியை பின்பற்றினால் ஏழு கழுதை வயசுலயும் ரஜினி மாதிரி இவங்களே கதாநாயகியாக வரலாம் கல்லாப் பெட்டியும் நிரம்பும். சன்னியை பின் தொடரலாம்தான் ஆனா மகளிர் அமைப்புகள் சும்மா இருக்குமா யோசிங்க...

Comments