விஜய்க்கு மனைவியாக நடித்தவர் சீரியலுக்கு வந்த கதை | தினகரன் வாரமஞ்சரி

விஜய்க்கு மனைவியாக நடித்தவர் சீரியலுக்கு வந்த கதை

காவலன்’ படத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த நடிகை மித்ரா, தற்போது சினிமாவில் வாய்ப்பு இல்லாமல் சீரியலில் நடித்து வருகிறார். விஜய் வடிவேலு கூட்டணியில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நகைச்சுவை படம் ‘காவலன்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். படத்தின் அசினுக்கு தோழியாக நடித்திருப்பவர் நடிகை மித்ரா. இவர்தான் இறுதியில் நடிகர் விஜய்யை திருமணம் செய்துக்கொள்வது போல் க்ளைமாக்ஸ் இருக்கும். இந்நிலையில் இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் சில காலம் ஒதுங்கி இருந்தார், தொடர்ந்து படங்கள் கிடைக்காததினால் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். சினிமா போனால் என்ன? சீரியல் இருக்கின்றதே என தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கிவிட்டார்,

சன் டிவியில் வரும் அழகு சீரியலில் ஒரு முக்கியமான வேடத்தில் மித்ரா நடித்து வருகிறார். ஒரு காலத்தில் விஜய்க்கு மனைவியாக நடித்த இவருக்கா இந்த நிலைமை என்று ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Comments