சமூக ஊடகம் வரமா, சாபமா? | தினகரன் வாரமஞ்சரி

சமூக ஊடகம் வரமா, சாபமா?

சமூக ஊடகத்தைப் பற்றி எத்தனை தடவை பிரஸ்தாபித்தாலும் தவறில்லை என்றதை நீங்கள் மறுக்கமாட்டீங்கள். ஏனெண்டால், தேசிய ஊடகங்களில் அஃது ஒரு பேசுபொருளாகியிருக்கிறது. கண்டி கலவரத்திற்குப் பின்னர்தான் சமூக ஊடகங்கள்பற்றிக் கூடுதலாகப் பேசப்படுகிறது.

சமூக ஊடகத்தின் மூலமாகவே இனவாதம் பரப்பப்படுகிறது; அதனால், அதனைத் தடை செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்ைகக்கு அமைய, ஒரு வாரம் அவற்றைத் தடை செய்யவும் அரசாங்கம் நடவடிக்ைக எடுத்திருந்தது. அந்த ஒரு வாரம் தங்கள் வாழ்க்ைகயின் இருண்டகாலம் எனும் அளவிற்குச் சிலர் நொந்துகொண்டிருந்ததையும் காணக்கூடியதாகவிருந்தது.

உண்மையில் சமூக ஊடகம் என்பது வேறு, சமூக வலைத்தளம் என்பது வேறு. இங்கே நான் சமூக ஊடகம் என்று விளித்தது, சமூக வலைத்தளத்தைத்தான்.

ஆங்கிலத்தில் தெள்ளத் தெளிவாக Social Media, Community Journalism என்று வரைவிலக்கணப்படுத்துகிறார்கள். நாம் இரண்டையும் குழப்பிக் ெகாள்கிறோம். சிலர் தேசிய ரீதியாகச் செயற்படும் Professional Journalism துறையில் இருந்துகொண்டே தங்களின் Community Journalism பணியைச் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் இனம், சமூகம், மொழி, கலை, இலக்கியம் என்று ஒரு பக்கம் சார்பானவர்களாக இனமான உணர்வுடன் செயற்படுகின்றனர்.

இன்னுஞ்சிலர் தங்களின் இனமான உணர்வினைச் சமூக ஊடகத்தில் (வலைத்தளத்தில்) காண்பிக்கிறார்கள். என்றாலும், மற்ற இனங்களைப் பற்றிக் கீழ்த்தரமாகக் குறிப்பிடாதவரை அதனை இனவாதம் என்றுரைக்க முடியாது! அஃது இனத்துவம்! தேசியம் மீதான பற்று!!

என்னதான் சொன்னாலும், இனவாதம் பரவுவது சமூக வலைத்தளத்தில் என்பதைச் சிலர் ஏற்க முடியாது என்கிறார்கள். ஏனெனில், கண்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகள், சமூக ஊடகத்தில் பரவிய இனவாதத்தினால் அல்லவென்றும் அவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என்றும் உறுதியாகச் சொல்கிறார் மனித உரிமை ஆர்வலரான அம்பிகா சற்குணநாதன்.

இன விரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் பற்றிச் சுட்டிக்காட்டியும் அதுபற்றி அரசாங்கம் உரிய வேளையில் நடவடிக்ைக எடுக்கத் தவறியமையே பிரச்சினைகள் உருவாக ஒரு காரணம் என்கிறார் அவர். அது மட்டுமல்ல, இலங்கையர்கள் மத்தியில் சகிப்புத்தன்மை இல்லாமை, மற்றவர்களின் தனித்துவங்களை மதிக்கும் மனப்பாங்கு இல்லாமை, இலங்கையின் பன்முகத் தன்மையை அங்கீகரிக்கத்தயங்குகின்றமை போன்ற காரணங்களும் இனவாதச் சிந்தனையின் தோற்றுவாய் என்பது அவரது கருத்து.

அஃது அவ்வாறிருக்க, சமூக வலைத்தளம் என்பது ஓர் முக்கியமான கருவி; அதனைச் சரியாகப் பயன்படுத்தினால், பாதகங்களைவிடக் கூடுதலாகச் சாதகமானவற்றையே பற்றிக்கொள்ள முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். சிலர் சமூக வலைத்தளத்தைப் பிழையாகப் பயன்படுத்தித் தங்களின் வாழ்க்ைகயைக் கெடுத்துக்ெகாள்வது மாத்திரமன்றி நற்பெயரையும் பாழ்படுத்திக்ெகாள்கின்றனர் என்கிறார் பேராதனை பல்கலைக்கழகத்தின் மனநல ஆலோசகர் டாக்டர் கோசல அமரநாயக்க.

சமூக வலைத்தளத்திற்கு அடிமையானவர்களே நேர்மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்கின்றனர் என்கிறார் டாக்டர். சரி, சமூக வலைத்தளத்திற்கு ஒருவர் அடிமையா, இல்லையா? என்பதை எவ்வாறு அறிந்துகொள்வது?

சமூக வலைத்தளத்தில் வரும் தத்துவங்களால் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்களா?

சமூக வலைத்தளத்திற்குச் செலவிடும் நேரத்தை வழமையைவிட அதிகரித்திருக்கிறீர்களா?

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தாவிட்டால், நீங்கள் தனிமையை உணர்கிறீர்களா?

சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்காக நீங்கள் ஏனைய பொழுதுபோக்கு அம்சங்களை உதாசீனப்படுத்துகிறீர்களா?

உங்கள் தனிமையைப் போக்குவதற்காக நீங்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகிறீர்களா?

சமூக ஊடகத்திற்கான பிரவேசத்தை நிறுத்திக்ெகாள்ள முடியவில்லை என்று கருதுகிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளில் கூடுதலானவற்றுக்கு உங்கள் பதில் ஆம்! என்றால், நீங்கள் சமூக வலைத்தளத்திற்கு அல்லது இணைய பயன்பாட்டிற்கு அடிமையாகியிருக்கிறீர்கள் என்று அர்த்தம்! என்கிறார் டாக்டர் அமரநாயக்க.

இன்னும்பலர் காலையில் நித்திரை விட்டு எழும்பியது முதல் இரவு நித்திரைக்குப் போகும் வரை தாம் ஆற்றிய பணிகளைப் படம்பிடித்துப் பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறார்கள். தங்களுடைய புகைப்படத்தைப் பார்த்து மற்றவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற சிந்தனைகூட அவர்களுக்கு இல்லை.போகும், வரும் இடம் எல்லாவற்றையும் படம்பிடிப்பதுதான் அவர்களின் குறிக் ேகாள். இங்கே டாக்டர் சொல்கிறார், உங்களுடைய சொந்த விடயங்களைப் பதிவேற்றம் செய்வதைத் தவிர்த்துக் ெகாள்ளுங்கள் என்று. இதனை எத்தனைபேர் கேட்கிறார்கள்? இதுதான் இன்று பலருக்கு பீடித்துள்ள நோய் என்கிறார் மருத்துவர்.

உண்மையில் சமூக வலைத்தளம் எதற்கு?

பால்ய வயது நண்பர்களைத் தேடிக்கண்டுபிடிக்க..(அவர் உண்மையான பெயரில் இருந்தால்) உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள, உறவுகளைப் புதுப்பித்துக்ெகாள்ள... என்று சொன்னாலும், இன்று அநேகர் உணர்வுகளை அல்ல தங்களின் கருத்துகளைச் சொல்லி வீண் பிரச்சினைகளை உருவாக்கிக் ெகாள்கிறார்கள். இன்னுஞ்சிலர் முகநூலில் செய்திச் சேவை நடத்துகிறார்கள். ஓர் இணையத்தளத்தை நடத்தத் தெரியாமல், முகநூலில் செய்திகளைப் பரிமாறுகிறார்கள். அதற்கு லைக்கும் கேட்கிறார்கள். தகவலைப்பகிர்வது தவறு அல்ல. அதனை ஒரு செய்திச்சேவையைப்போன்று நடத்துவது அழகல்லவே!

மொத்தத்தில் சமூக வலைத்தளம் என்பது வரமே அன்றிச் சாபம் அல்ல. அதனைச் சரியாகப் பயன்படுத்திக் ெகாள்வோம்.

Comments