இருதய 640 slice CT scanner ஐ நிறுவியுள்ள Leesons ஹொஸ்பிட்டல் | தினகரன் வாரமஞ்சரி

இருதய 640 slice CT scanner ஐ நிறுவியுள்ள Leesons ஹொஸ்பிட்டல்

கம்பஹாவில் முன்னணி சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் வைத்தியசாலையான Leesons தனியார் வைத்தியசாலை, உலகின் நவீன அம்சங்களைக் கொண்ட 640 slice CT scanning system ஐ நிறுவியுள்ளது.

மருத்துவத் துறைக்கு இயந்திரங்கள் மற்றும் சேவைகளை வழங்கும் நன்மதிப்பைப் பெற்ற சேவை வழங்குநரான Mediquipment இனால் நிறுவப்பட்டுள்ள புதிய Toshiba Aquilion ONE ViSION EDITION – CT ஸ்கானர், உலகில் காணப்படும் நவீன அம்சங்களுடன் திறன் வாய்ந்த CT ஸ்கானராகத் திகழ்கிறது. இருதயம் ஒரு துடிப்பைக் கொண்டு வேகமாக ஸ்கேன் செய்யும் ஆற்றல் படைத்த இந்த இயந்திரம், நோயாளர்களில் குறைந்த கதிரியக்கங்களுக்கு வெளிப்படுத்தி, அதிகளவு திறன் வாய்ந்த பரிசோதனைகளை மேற்கொள்கிறது.

Aquilion ONE ViSION EDITION ஐ ஜப்பானின் Toshiba Medical Systems Corporation உற்பத்தி செய்கிறது. தற்போது இந்நிறுவனம் Canon குழுமத்தின் துணை நிறுவனமாக அமைந்துள்ளது. மருத்துவத்துறையில் Canon இன் பிரசன்னத்தை மேம்படுத்தும் வகையில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உயர்தரம் வாய்ந்த Ultrasound, CT, MRI மற்றும் x- - Ray கட்டமைப்புகளை உற்பத்தி செய்யும் Toshibaவின் இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்திருந்தது.

Leesons வைத்தியசாலை முகாமைத்துவ பணிப்பாளர் சமன் கிரிஷாந்த கருத்துத் தெரிவிக்கையில்,எமது நோய் பரிசோதனை பிரிவில் குறிப்பிடத்தக்களவு மேம்படுத்தலை அறிமுகம் செய்துள்ளதையிட்டு நாம் பெருமைகொள்கிறோம். நவீன அம்சங்களைக் கொண்ட உயர்திறன் வாய்ந்த Toshiba Aquilion ONE ViSION EDITION ILeesons வைத்தியசாலையில் நிறுவியுள்ளோம்.

வழமைபோன்று, நோயாளர்களின் பாதுகாப்பு மற்றும் செளகரியம் ஆகியன எமது முக்கிய குறிக்கோளாக அமைந்துள்ளது.

இந்த இயந்திரத்தினூடாக, நெஞ்சறை x-ray இன்போது ஆகக்குறைந்த x--ray கதிரியக்க வெளியீடான 0.26 m-Sv ஐ எம்மால் உறுதிசெய்யமுடியும். அல்லது விமானமொன்றில் நாம் பயணிக்கும்போது எதிர்கொள்ளும் கதிரியக்கமட்ட அளவுக்கு நிகரானதாக அமைந்துள்ளது என்றார்.

Comments