தகைமையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யும் ஸ்ரீ லங்கா டெக்னொலொஜிகல் கம்பஸ் (SLTC) | தினகரன் வாரமஞ்சரி

தகைமையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசிக்க செய்யும் ஸ்ரீ லங்கா டெக்னொலொஜிகல் கம்பஸ் (SLTC)

 ஸ்ரீலங்கா டெக்னொலொஜிகல் கம்பஸ் (SLTC) தனது முதலாவது ETNECH இளைஞர் சிறப்பு புலமைப்பரிசில் விருதுகள் வழங்கும் நிகழ்வில், தகைமையுடைய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தது. இந்நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர். கே.கே.வை.டபிள்யு. பெரேரா மற்றும் SLTC நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டார்.

ENTECH இளைஞர் சிறப்பு திட்டம் முன்னோடியான செயற்திட்டமாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் இளைஞர்களுக்கு தமது உயர் கல்வி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கனவை நனவாக்கிக் கொள்ள உதவும் வகையில் SLTC இனால் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2018ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் போது, தகைமை வாய்ந்த மாணவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டிருந்தது. ETNECH புலமைப்பரிசில் திட்டம், பிரத்தியேகமான நிலையை கொண்டுள்ளதுடன், நாட்டில் காணப்படும் மெரிட் அடிப்படையிலான புலமைப்பரிசில் திட்டமாகவும் அமைந்துள்ளது. இதனூடாக தகைமை வாய்ந்த மாணவர்களுக்கு முழுமையான பகுதியான புலமைப்பரிசில்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. க.பொ.த. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகின்றன. க.பொ.த உயர் தரப்பரீட்சையில் 3 A சித்திகளை பெற்ற மாணவர்களுக்கு முழுமையான (100%) புலமைப்பரிசிலை பெற்றுக் கொள்வதற்கான தகைமையை பெறுவார்கள். மேலும் ஒவ்வொரு A சித்தியையும் பெற்ற மாணவர்களுக்கு தலா 30மூ மானியம் வழங்கியிருந்ததுடன், ஒவ்வொரு B சித்தியை பெற்றோருக்கு தலா 20மூ மானியம் வழங்கியிருந்தது. மேலும் ஒவ்வொரு C சித்தியையும் பெற்றுவர்களுக்கு தலா 10% மானியத்தை வழங்கியிருந்தது.

SLTC இன் ஸ்தாபக தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரஞ்சித் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 3 ஆண்டுகளுக்கு முன்னர் SLTC நிறுவப்பட்டிருந்தது. இதன் நோக்கம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் தகைமை பெற்ற அனைத்து இலங்கையின் இளைஞர்களுக்கு கல்வி வாய்ப்புகளை தொடர வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருந்தது.

நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு, அறிவார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த இளம் தலைமுறையினரை உருவாக்குவது எமது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

Comments