30 வருட பூர்த்தியைக்கொண்டாடும் செலான் வங்கி | தினகரன் வாரமஞ்சரி

30 வருட பூர்த்தியைக்கொண்டாடும் செலான் வங்கி

மக்களுக்கும் வியாபாரங்களுக்கு வலுவூட்டுவதில் 30 வருடகாலமாக புத்தாக்கமான மற்றும் செளகரியமான வங்கியியல் தீர்வுகளை செலான் வங்கி வழங்கிவருகிறது. தனது 30 வருடபூர்த்தியைகொண்டாடும் வகையில் நாட்டின் வெவ்வேறுபகுதிகளில் சமய அனுஷ்டானங்களை ஏற்பாடுசெய்திருந்தது. இதில் முதல் அங்கமாக,வங்கியின் தலைமையகத்தில் பிரித் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கு ஆசிவேண்டி இந்த சமய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

1987 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செலான் வங்கி, 1988 மார்ச் 24 ஆம் திகதி வியாபார செயற்பாடுகளை கொழும்பு கோட்டை பகுதியில் ஆரம்பித்திருந்தது.

ஆரம்பம் முதல் வங்கி தனது உறுதிமொழியான “அன்புடன் அரவணைக்கும் வங்கி” என்பதற்கமைய புரட்சிகரமான வங்கியியல் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது.

இந்த சமயநிகழ்வு,செலான் வங்கியின் தலைவர் ரவி டயஸ்,பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கபில ஆரியரட்ன, கூட்டாண்மை நிர்வாகத்தினர் மற்றும் வங்கியின் இதர ஊழியர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இலங்கையில் தொடர்ச்சியாக 30 வருடங்களாக உறுதியானநிதி நிலை, ஆற்றல் மற்றும் நம்பிக்கையுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வந்துள்ளதையிட்டு பெருமைகொள்கிறது.

இலங்கையில் சிறந்த நிதிச் சேவைகளை வழங்கும் வங்கியாக திகழ்வது எனும் நோக்குடன் இயங்கும் செலான் வங்கி, தனது பெறுமதி உருவாக்கலை,வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன், அவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் மேற்கொள்ளும்.

Comments